Header image alt text

விழிநீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 1 March 2024
Posted in செய்திகள் 

தோழர் செந்தில் (கந்தசாமி கணேசன்) அவர்கள்
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும் வைரவப்புளியங்குளம், நொச்சிமொட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தோழர் செந்தில் (கந்தசாமி கணேசன்) அவர்கள் இன்று அதிகாலை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு தோழருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

Read more

இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ள பாடசாலை பரீட்சைகள், அவை நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 06 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை நடத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. Read more

எதிர்வரும் திங்கட்கிழமையின் (04) பின்னர் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக இரு முறைமைகள் பின்பற்றப்படுவதாக மோட்டார் வாகன  போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். இந்த அறிவிப்பானது நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். Read more