Header image alt text

வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

தெற்காசிய பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் உள்ள விருந்தகமொன்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 சிரேஷ்ட விமான போக்குவரத்து நிபுணர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுசரணையுடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜப்பான் அரசாங்கம் 1,600 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இது இலங்கை நாணய பெறுமதியில் 3.3 பில்லியன் ரூபாய் ஆகும். இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் இருதரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்தும் வகையில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி உபகரணங்களை கொள்வனவு செய்தல், மகப்பேற்று சிகிச்சையை மேம்படுத்துதல், கடலோர காவல்துறையினை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் எழுத்து மூல கோரிக்கையை கருத்திற் கொண்டு குறித்த பணிபுறக்கணிப்பு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில், நீதவான் மன்றுக்கு வருகை தராமையால் வழக்கின் தீர்ப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். Read more