Header image alt text

வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள்

09.03.2022இல் மரணித்த தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று….

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லங்கம பஸ் பாஸ் ரத்து செய்ய திறைசேரியின் தீர்மானத்தை அமைச்சரவை நிராகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாஸை ரத்து செய்ய திறைசேரி முடிவு செய்தது. அந்த பஸ் அனுமதிப்பத்திரத்திற்காக அரசாங்கம் வருடாந்தம் எட்டு கோடி ரூபாவை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இவ்வளவு தொகையை இந்த வருடம் ஒதுக்க முடியாது என திறைசேரி, பாராளுமன்றத்துக்கு  அறிவித்திருந்தது. Read more

இலங்கையில் 5 – 19 வயது வரையிலான பாடசாலையில் கல்வி கற்கும் 410,000  பெண் பிள்ளைகள்  போசணை குறைப்பாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார். பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக  இலங்கையில் உள்ளது. Read more