Header image alt text

இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, ஜனநாயக ஆட்சி மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக  Volker Türk தெரிவித்தார். Read more

ஜெர்மனிக்கு சொந்தமான MV Sanchuka கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது காணாமற்போன இலங்கையர் தொடர்பில், நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து சம்மேளனத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, அந்த சம்மேளனத்தின் பரிசோதகர் ஒருவர் இலங்கை கப்பல் பணியாளர் பணிபுரிந்த கப்பலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அத்துகோரல தெரிவித்தார். இதனிடையே, குறித்த இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகக் கப்பற்றுறை  செயலகம் தெரிவித்தது. Read more