Header image alt text

சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். கடல்சார் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வணிகர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் 100 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடற்படை எஸ்.எம்.எஸ் கஜபாவை இலங்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். Read more

Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை கடலில் யாழ்.மீனவர்கள் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக  மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய கடல் எல்லைக்கு அருகே சென்று மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகைத்தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.