Header image alt text

வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி இந்நாட்களில் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700  Bombardier விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், விமானப்படை தளபதி , கடற்படை தளபதி ஆகியோர் நேற்று இவர்களை வரவேற்றுள்ளனர். Read more

அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளின் கல்வி முறையில் தரம் 08 முதல் 13 ஆம் தரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல்.இளங்கோவன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கையளித்துள்ளார். இலங்கை நிர்வாகச் சேவையின் அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவியை வகித்ததுடன், வட மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். Read more

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது. சம்பள முரண்பாட்டை முன்வைத்து நேற்று முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைத்தலைவர் தம்மிக S.ப்ரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து பல்கலைகழகங்களுக்கு முன்பாகவும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.