Header image alt text

இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த மேலும்  32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் வருவதை தடுக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில், நேற்றிரவு யாழ்ப்பாணம்  – நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து  தமிழக மீனவர்கள்  25 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும்  எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால்  தோல்வியடைந்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது, சபாநாயகர் செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. Read more

COPE குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா விலகியுள்ளார். COPE குழுவின் தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமையினால் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். COPE  குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இரான் விக்ரம ரத்ன, பேராசிரியர் ச்சரித்த ஹேரத், தயாசிரி ஜயசேகர, சாணக்கியன், S.M. மரிக்கார், காமினி வலேபோட, ஹேஷா ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

அனுர குமார கனடா பயணம்-

Posted by plotenewseditor on 21 March 2024
Posted in செய்திகள் 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று மாலை கனடாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி டொரன்டோவிலும் 24 ஆம் திகதி வென்கூவரிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன.