Header image alt text

தமது அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் செயற்பாடுகளே தம்மை அதிகாரத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்ற சதி’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றுவதற்கான சதித்திட்டங்கள் காணப்பட்டதாக தெரிவித்து அவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இன்று சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எதிர்கொண்ட கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடிகள் குறித்து இந்தப் புத்தகத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார். Read more

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய அ.சிவபாலசுந்தரன் ஓய்வு பெற்றுள்ளார். புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் உரிய முறையில் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்றூவர் இதன்போது தெரிவித்துள்ளார்.