இன்று நள்ளிரவு 12 மணி முதல் பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. தமது சம்பளம் குறைக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில் கிடைக்கப்பெறாமையின் காரணமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.