தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் நினைவாக..தோழர்.ஆர்.ஆர் எனும் அமரர் நல்லநாதர் பெயரில் அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், செயலதிபரின் நினைவில்லத்தில் “பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையம்” எனும் செயல்திட்டம் இன்றையதினம் கழகத்தின் (புளொட்) தேசிய அமைப்பாளர் தோழர்.பீற்றர் அவர்களின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தோழர்.ஆர்.ஆர் அவர்களின் முப்பத்தியொராம் நாளுக்கு முன்பாக இத்திட்டம் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
