தமது அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் செயற்பாடுகளே தம்மை அதிகாரத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்ற சதி’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றுவதற்கான சதித்திட்டங்கள் காணப்பட்டதாக தெரிவித்து அவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இன்று சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எதிர்கொண்ட கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடிகள் குறித்து இந்தப் புத்தகத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அதிகாரம் சரிவடைந்தமை குறித்து தமது புத்தகத்தில் விளக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலரை பல்வேறு பதவிகளில் நியமிக்க தாம் விரும்பவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.