ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
எதிர்காலங்களில் 4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு வயதை பூர்த்தி செய்த சிறார்களுக்கு எதிர்காலங்களில் Pre grade என்ற வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள நாடு என்ற போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமை வெகுவிரைவில் மாற வேண்டும் என நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் தெரிவித்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதமான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இருந்த போதும், ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.