இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.