யாழ் சுழிபுரம் கிழக்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் 13.03.2024 புதன்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை முதல்வர் வி.பிரகலாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
14.03.2021 ல் மரணித்த தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன் -செட்டிபாளையம்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுகள்…
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்க முடியுமெனவும் எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்குமெனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ரயில் ஆசனங்களை இன்றுமுதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே ஒன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக ஒன்லைன் மூலம் மட்டுமே ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.