யாழ். சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் இல்லங்களுக்கு இடையேயான வருடாந்த விளையாட்டுப் போட்டி 14.03.2024 பிற்பகல் 1மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி சைலினி பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்து வவுனியா வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 8 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.