தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் லண்டனில் நடைபெறவுள்ளது.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக அருண் தம்பிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுச்சபையின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இதுவரை காலம் தலைவர் பதவிக்கு இழுபறி நிலை நிலவிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களான ஹினாட்டியான மகேஷ் மற்றும் ஷான் அரோஷ் லியனகே எனப்படும் மத்துகம ஷான் ஆகியோருக்கு எதிராக பொய்யான தகவல்களின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.