ஜப்பான் அரசாங்கம் 1,600 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இது இலங்கை நாணய பெறுமதியில் 3.3 பில்லியன் ரூபாய் ஆகும். இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் இருதரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்தும் வகையில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி உபகரணங்களை கொள்வனவு செய்தல், மகப்பேற்று சிகிச்சையை மேம்படுத்துதல், கடலோர காவல்துறையினை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.