வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 08 பேரும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். Read more
காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை அறிவித்துள்ளார். இந்த அபிவிருத்திப் பணியின் மூலம், துறைமுகத்தினை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் பெரிய கப்பல்களை தரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன்படி, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.