சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றாகும். இதற்கென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு கூடவுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான நேற்றைய முதல் நாள் விவாதத்தை எதிர்க்கட்சியின் சார்பில் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளுங்கட்சியின் சார்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவும் ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 க்கு இடம்பெறவுள்ளது.