COPE குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா விலகியுள்ளார். COPE குழுவின் தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமையினால் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். COPE குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இரான் விக்ரம ரத்ன, பேராசிரியர் ச்சரித்த ஹேரத், தயாசிரி ஜயசேகர, சாணக்கியன், S.M. மரிக்கார், காமினி வலேபோட, ஹேஷா ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன COPE குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமையினால், இவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர்.
இதற்கமைய, இதுவரை COPE குழுவிலிருந்து 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.