இலங்கை எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் இரண்டாம் காலாண்டு பகுதியில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாக தீர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more
1982.03.28ல் மரணித்த கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளர் தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
சீனாவின் நான்கு ஆய்வுக் கப்பல்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பை அண்மித்த இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளன. எதிர்வரும் இரண்டு வாரங்களில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்தியா பரிசோதிக்கவுள்ளதன் பின்புலத்திலேயே கப்பல்கள் இலங்கை கடற்பரப்பினை அண்மித்து இந்து சமுத்திரத்திற்குள் வந்துள்ளன.
கனடா நாட்டில் வசிக்கும் டிஷாணன் அவர்கள் தோழர் ஆர்ஆர் அவர்களின் ஞாபகார்த்தமாக திருகோணமலை பாலையூற்று முருகன் கோவிலடி சத்தி மாதர் சங்கத்தால் நடாத்தப்படும் இலவச தையல் பயிற்சி நிலையத்துக்கு 27,500/- ரூபா பெறுமதியில் தையல் மேசை ஒன்றினை கழகத்தின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் ஊடாக வழங்கியுள்ளார்.