பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். Read more
குயின் மேரி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. தாய்லாந்தின் புகட் நகரிலிருந்து குறித்த சொகுசு ரக கப்பல் வந்துள்ளது. அதில் 2,290 சுற்றுலாப் பயணிகளும் 1,218 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர். பிரித்தானியா, சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கச்சத்தீவு விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையினால் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அமைய, பெறப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரேந்திர மோடி தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதன்படி, 1974ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.