வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 12 March 2024
Posted in செய்திகள்
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது என தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மேலும், என்னை விட தகைமையானவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் கூறினார். தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம். அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 10 March 2024
Posted in செய்திகள்
சிவராத்திரி தினமன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்காகசென்றவர்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படையினரின் காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 10.03.2024 நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 10 March 2024
Posted in செய்திகள்
காவல்துறை அதிகாரம் இல்லாத ஏனைய அதிகார பரவலாக்கம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலையில் இடம்பெற்றதாக கூறப்படும் காவல்துறை அடாவடிதனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தின் காவல்துறை அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பரவலாக்க தயாராக உள்ளதாக கூறுகிறார். Read more
Posted by plotenewseditor on 10 March 2024
Posted in செய்திகள்
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நேற்றைய தினம் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது பாதணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
Posted by plotenewseditor on 9 March 2024
Posted in செய்திகள்


வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள்
Posted by plotenewseditor on 9 March 2024
Posted in செய்திகள்
09.03.2022இல் மரணித்த தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 9 March 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more