பாராளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லங்கம பஸ் பாஸ் ரத்து செய்ய திறைசேரியின் தீர்மானத்தை அமைச்சரவை நிராகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாஸை ரத்து செய்ய திறைசேரி முடிவு செய்தது. அந்த பஸ் அனுமதிப்பத்திரத்திற்காக அரசாங்கம் வருடாந்தம் எட்டு கோடி ரூபாவை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இவ்வளவு தொகையை இந்த வருடம் ஒதுக்க முடியாது என திறைசேரி, பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தது. Read more
இலங்கையில் 5 – 19 வயது வரையிலான பாடசாலையில் கல்வி கற்கும் 410,000 பெண் பிள்ளைகள் போசணை குறைப்பாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார். பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது.
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
எதிர்காலங்களில் 4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி சீர்த்திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு வயதை பூர்த்தி செய்த சிறார்களுக்கு எதிர்காலங்களில் Pre grade என்ற வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள நாடு என்ற போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமை வெகுவிரைவில் மாற வேண்டும் என நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் தெரிவித்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதமான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இருந்த போதும், ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் செயற்பாடுகளே தம்மை அதிகாரத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்ற சதி’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றுவதற்கான சதித்திட்டங்கள் காணப்பட்டதாக தெரிவித்து அவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இன்று சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எதிர்கொண்ட கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடிகள் குறித்து இந்தப் புத்தகத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய அ.சிவபாலசுந்தரன் ஓய்வு பெற்றுள்ளார். புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் உரிய முறையில் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்றூவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் 6 வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.