வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்து வவுனியா வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 8 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது. Read more
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற விளையாட்டு விழா நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இருந்தது. இதன் விளைவாக, இன்று செலின் அறக்கட்டளை சுகாதார வசதிகள் இல்லாத சுகாதார வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மிக முக்கியமானதொரு திட்டத்தை முன்வைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்குறுதியளித்தபடி ஸ்கொட்லாந்து நியுசிலாந்து போல, நிதிப் பிரச்சினைகளால் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெண்களுக்கு எமது அரசாங்கத்தின் ஊடாக இந்த சுகாதார உபகரணங்கள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை ஏதிலிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, அதனை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ரவிகுமார் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில் உள்ள, இலங்கை ஏதிலிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர் அறுவரை கொலை செய்த 19 வயது இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் நால்வர் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரால் தாக்கப்பட்ட, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ் சுழிபுரம் கிழக்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் 13.03.2024 புதன்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை முதல்வர் வி.பிரகலாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
14.03.2021 ல் மரணித்த தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன் -செட்டிபாளையம்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுகள்…
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்க முடியுமெனவும் எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்குமெனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.