 வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு வருகை தருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.