மட்டக்களப்பு ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் கரையாக்கன்தீவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளரும், ஆசிரியருமான தோழர் வாசுமாமா (சின்னத்தம்பி உமையகாந்தன்) அவர்கள் இன்று (12.02.2022) சுகயீனம் காரணமாக மரணித்த செய்தியறிந்து மிகுந்த துயரடைகின்றோம்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
12.02.2022.
விழிநீர் அஞ்சலி!
அமரர் உமாகாந்தன் (தோழர் வாசு மாமா) அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் பின்னர் ஆசிரியராகவும் தன்னை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு சிறந்த சமூக சேவையாளர்.
இவர் ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் கரையாக்கந்தீவினை வசிப்பிடமாகவும் கொண்டு மக்களுக்கான பணியை தொடர்ச்சியாக செய்து வந்த சிறந்த மனிதர்.
அன்னார் 2022/02/12 இன்று சுகயீனம் காரணமாக இறைபதமடைந்தார் என்ற செய்தி எம் அனைவரையும் ஆழ்ந்த துயரிலாற்றியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – மட்டக்களப்பு.