ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கத்தினூடாக பொறுப்பேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தை கடனுடன் விற்பனை செய்ய முடியாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நேற்று(04) அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.