யாழ் சுழிபுரம் கிழக்கு அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் 13.03.2024 புதன்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை முதல்வர் வி.பிரகலாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சூ.நோபேட் உதயகுமார் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் – சங்கானை), செல்வி வைத்திலிங்கம் மனோராணி (ஓய்வுநிலை ஆசிரியர் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக நவரத்தினம் ஜெயரஞ்சன் (பழைய மாணவன்), வைத்திலிங்கம் ஏரம்பமூர்த்தி (பழைய மாணவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

