யாழ். சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் இல்லங்களுக்கு இடையேயான வருடாந்த விளையாட்டுப் போட்டி 14.03.2024 பிற்பகல் 1மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி சைலினி பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திருமதி கஸ்தூரி அகலங்கன் (சட்டத்தரணி), திரு. சோமசுந்தரம் ராமநாதன் (கோட்டக்கல்வி அதிகாரி), கௌரவ விருந்தினர்களாக திரு. சேல்வகுமரன் விஜயராஜ் (லயன்ஸ் கழக உறுப்பினர்), திருமதி ரவீந்திரன் யோகா (பிரதேச சபை உறுப்பினர்), திருமதி பிரமிளா பராகுலன் (ஆயர்வேத வைத்திய அதிகாரி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
