நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன்படி, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இரு தரப்புகளிலிருந்து முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் குறித்த தடை உத்தரவை நீடித்துள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.