ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் ஆ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் இடம்பெறும் என்பது தொடர்பிலான கருத்தாடல்கள் வலுவடைந்து வருகின்றன.

இந்தநிலையில், அது தொடர்பான தெளிவுபடுத்தல்களுக்காக, பேராசிரியர் ஆ. சர்வேஸ்வரனை தொடர்பு கொண்டு ஊடகமொன்று வினவியபோது, முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளையே ஜனாதிபதி முன்னெடுப்பாரென குறிப்பிட்டார்.