சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது, சபாநாயகர் செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 நாட்கள் விவாதத்தின் பின்னர் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.