பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த நாட்டு பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன எதிர்வரும் 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டு கடனில் சீனா 10 சதவீதத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.