Header image alt text

இணுவிலில் உயிருள்ளவரை நட்பிருக்கும் குறும்படம் வெளியீடு-கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன்

1392035_618883394821712_1443595897_n

யாழ். இணுவில் அறிவாலயத்தில் தீபாவளி தினத்தன்று (02.11.2013) காலை குறும்பட வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. உயிருள்ளவரை நட்பிருக்கும் என்கிற பெயரிலான இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்வினை திரு. ஞானசூரியர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இணுவிலைச் சேர்ந்த திரு. கௌரீசன் அவர்களும் அவருடைய நண்பர்களும் இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கியிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு மேற்படி குறும்படத்தினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு. கு.விக்னேஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில்; இளைஞர்கள், பெண்கள் ஊர் பிரமுகர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். (இந்நிகழ்வு சம்பந்தமான படங்கள் இங்கு தரப்படுகின்றன).

   1382816_618883728155012_1191960581_n  1385253_618883614821690_1670498497_n 1381565_618883338155051_1179287294_n1395397_618883178155067_1563085995_n1391731_618883554821696_273998781_n1450320_618882974821754_232691083_n

1392035_618883394821712_1443595897_n1450349_618883061488412_251477256_n941809_618883014821750_46036827_n

 

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும், வலி.வடக்கு வீடழிப்பைக் கண்டித்தும் கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசா உண்ணாவிரதம்

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்று அறிவித்துள்ளார். வலிகாமம் வடக்கிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடமபெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அவற்றினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக நாளைகாலை 6.15 மணிமுதல் வெள்ளிக்கிழமை வரை உண்ணாவிரத பேராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக தம்பிராசா களமிறங்கியிருந்தார். Read more

கிறீன்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வர முயற்சி-

அவுஸ்திரேலிய கீரின் கட்சி செனட்டர் லீ ஆர்ஹியான்னோன் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பதாகவே இலங்கை செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நியூஸிலாந்தின் கீரின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லோகியும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சனல் 4 இயக்குனர் இலங்கை வர அனுமதி-

சனல் 4 ஆவணப்படங்களின் இயக்குனர் கெல்லும் மெக்ரே இலங்கைக்குள் நுழைவதற்கான விஸா வழங்கப்பட்டுள்ளது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காகவே இவருக்கு விஸா வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவினருக்கும் விஸா வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமும் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
மன்மோகன் எதிர்பார்பை நிறைவேற்ற வேண்டும்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு இந்திய பிரதமர் மன்மோன்சிங் இலங்கை சென்றால், அவர் வடக்கிற்கு செல்வது சிறந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, இலங்கை மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

புத்தூர் பெண் கொலை தொடர்பில் கவனயீர்ப்பு போhட்டம்-

யாழ். புத்தூர் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இன்றுகாலை 7 மணிமுதல் 10 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், ஊர்மக்கள் பெண்கள் அமைப்பினர், என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கடந்த 29ஆம் திகதி புத்தூர் கிழக்கை சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது 27) எனும் பெண் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த பெண் பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டு இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளப்பட்டு இந்த கொலை குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.