Header image alt text

கூட்டமைப்புக்கெதிரான கூட்டணி தொடர்பான செய்திக்கு புளொட் மறுப்பு-

ploteதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும், இக்கலந்துரையாடலில் புளொட்டின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தாகவும் ஒரு சில இணையத்தளங்கள் தவறான செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் புளொட் அமைப்பைச் சார்ந்த எவரும் பங்குபற்றவில்லை என்பதை நாங்கள் அறியத் தருகின்றோம்.

ம.பத்மநாதன்,
ஊடகத் தொடர்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
12.01.2014.

வடக்கு முதல்வர் மகசின் சிறைச்சாலைக்கு விஜயம்-

vikiதண்டணைக் காலத்திற்கு அதிகமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை கொழும்பு, மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் வடக்கு முதலமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சீ.வி.விக்னேஷ்வரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு-

ltteபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 20 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய அவர்கள் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு தொழில் பயிற்சிகளுடன் வெளிநாட்டு மொழிகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாதீன, நம்பகரமான விசாரணைமூலம் உண்மையை கண்டறிய வேண்டும்-அமெரிக்கா-

americaஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகளுடாக இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் சட்டத்தின் குற்றவாளிகளை முன் நிறுத்துமாறும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீவன் ஜே. ரப் தெரிவித்துள்ளார். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் நேற்று 11ஆம் திகதிவரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஸ்டீவன் ஜே. ரப் தனது விஜய நிறைவின்போது இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சுபீட்சம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது. சம்பவங்கள் அவற்றிற்கான ஏற்புடைய தீர்வுகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருவதும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் கொள்கைகளை மதித்து ஒன்றிணைந்த நாடாக முன்னோக்கிச் செல்வதும் மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நிரந்தர வீட்டுத் திட்டம்; தொடர்பில் சமயபுரம் மக்கள் விசனம்-

3வவுனியா சமயபுரம் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு இதுவரை நிரந்தர வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த சமயபுரம் பகுதி மக்கள் நிரந்தர வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாததால் தற்காலிகக் குடிசைகளில் வாழ்வதால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்கள் நிவாரணத்தையே நம்பியிருக்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பியைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் இவர்கள் நிரந்தர வீடுகளை அமைப்பது என்பது சாத்தியமில்லாத விடயமாகவே காணப்படுகின்றது. இவர்கள் தமக்கும் நிரந்தர வீட்டுத் திட்டத்தை வழங்குமாறு பலரிடமும் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆளுங் கட்சி கொழும்பு மத்தி அமைப்பாளராக ஹிருனிகா நியமனம்-

hirunikaஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார். இதேவேளை இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நாணய தாள்களுடன் சீசெல்ஸ் பெண் கைது-

arrest-with-currency60 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சீசெல்ஸ் நாட்டைச்சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவின் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். சந்தேகநபரான குறித்த பெண் இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் ஊடாக சிங்கபூருக்கு பயணமாவதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கபூர் டொலர், அமெரிக்க டொலர் மற்றும் யூரோ ஆகிய நாணயத்தாள்களே அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நேற்றையதினமே அவர் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் இன்று அதிகாலை நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முயற்சித்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கப்பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு முத்திரை வெளியீடு-

imagesCA9O8Z5Gஉழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உழவர்களின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் முத்திரை மற்றும் கடிதவுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் இந்திகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்,மேல் மாகாண சபைகளை கலைக்குமாறு முதலமைச்சர்கள் கடிதம்-

தென் மற்றும் மேல் ஆகிய இரு மாகாண சபைகளையும் கலைக்குமாறு கோரி அந்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்களிடம் கடிதங்களை கையளித்துள்ளனர். தென் மாகாண முதலமைச்சர் சாந்த விஜயலால் டி சில்வா தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவிடமும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவிடமும் கடிதங்களை கையளித்துள்ளனர். இவ்வாறான நிலையில் 12ஆம் திகதி நள்ளிரவுடன் இவ்விரு மாகாண சபைகளும் கலைக்கப்படலாம் என்றும், அதன்பின்னர் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களுக்கான திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லயன் எயாரில் பயணித்தோரின் ஆடைகள் அடையாளங் காணப்பட்டன-

lion airஇரணைதீவு கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தில் பயணித்த 17 பேரது ஆடைகளை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். லயன் ஏயார் விமானத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்காக, அந்த விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் இன்றும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இப்பொருட்கள் நேற்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தபோது குறித்த ஆடைகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு முதன்முறையாக நடமாடும் வைத்திய வாகன சேவை-

nadamadum vaithya sevai (1)கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடமாடும் வைத்திய வாகன சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென இருதய நோய்க்குள்ளாகும் ஒருவருக்கு அவரது வீட்டுக்கு சென்று முதலுதவி வழங்கி அவரை பாதுகாப்பாக அழைத்துவரும் வகையில் இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதார அமைச்சு சகல வசதிகளையும் கொண்ட அம்பியுலன்ஸ் வண்டியும் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் க.முருகானந்தன் சுகாதார அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வைத்திய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

அஞ்சலி

Posted by plotenewseditor on 12 January 2014
Posted in செய்திகள் 

mahendran-1024x512

கணேசபுரத்தில் வீடு முற்றாக எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி-

maanaadu (2)004qவவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசிக்கும் யதுகரன் லலிதா அவர்களின் வீடு நேற்றுக்காலை சாமி படத்துக்கு வைத்த விளக்கினால் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. லலிதா தனது வீட்டின் சாமி படத்திற்கு விளக்கு வைத்துவிட்டு தனது 7வயது நிரம்பிய மகளான கலைவாணியை நெலுக்குளம் பாடசாலையில் சேர்ப்பதற்காக சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கலைவாணிக்கு 03வயதாகும்போதே தந்தை யதுகரன் 2007-11.03 அன்று தவசிகுளத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கையைக் கொண்டுசென்ற லலிதாவின் குடும்பத்தை அவரது வீடு எரிந்தது மேலும் அவலநிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் இன்றுமாலை அங்கு சென்ற புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை முன்னாள் உப தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் சமுக சேவையாளருமான சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஜோச் வாசிங்டன், சமுக ஆர்வலர்கள் கேதீஸ், ஜெகதீஸ், ஆனந்தன் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டு, அதிரடி இணையத்தின் உதவியைக் கொண்டு லலிதாவின் குடும்பத்தின் அவசியத் தேவைகளுக்குரிய பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கியுள்ளனர்.

காணாமல்போனோர் முறைப்பாடு தொடர்பான விசாரணைகள்-

imagesCAQUTQUMimagesCAU3LXASimagesCAOD1KU1காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வாய்மூல விசாரணை அமர்வுகள் அடுத்தவாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். குறிப்பாக முறைபாடுகளை முன்வைக்குமாறு கடந்த வருடத்தில் 3 தடவைகள் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். டிசம்பர் 31ஆம் திகதிவரை ஆணைக்குழுவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முறைபாடுகள் தொடர்பான வாய்மூல விசாரணைகளை முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம், 19 ஆம், 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இந்த விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளன என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார்.

மூளாயில் 3வது பஜனைப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு-

vali metku thavisalar Nagaranjiniயாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் 100 பஜனை பாடசாலைத் திட்டத்தின்கீழ் நேற்றையதினம் 3ஆவது பஜனைப் பாடசாலை மூளாய் டச்சு வீதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் மாலை 5மணியளவில் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா. வாசுதேவக்குருக்கள் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையர்களான தாய், இரு குழந்தைகள் லண்டனில் சடலங்களாக மீட்பு-

london srilankan dead (1) NWS_RTD-Brent Child Murdersஇலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயாரின் உடல்கள் லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. ஏழு மாத ஆண் குழந்தை, நதீபன் மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் அனோபன் உள்ளிட்ட இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரான ஜெயவாணி வாகேஸ்வரனின் சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு ஜெயவாணியின் கணவர் சக்திவேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களையும் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் வூட்கிறாஞ் குளோஸ் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலங்களை மீட்டுள்ளனர். 33வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்த பின் தானும் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பிரித்தானிய பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க தூதுவர்மீது கண்டனம்-

michel je sisonஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜெ செசோனை ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர் என அறிவிக்குமாறு தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப்புடன் இணைந்து, இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையால் இவ்வாறு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவன் ஜே ரெப், புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு புகைப்படத்தில் 2009ம் ஆண்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கருத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டீவன் ஜே ரெப் எல்லைகளை கடந்து செயற்பட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமெரிக்காவின் தூதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத ராஜதந்திரி என்று அறிவிக்குமாறும் வசந்தபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

பாட்டாளிபுரம் பகுதியில் யானை தாக்கி பெண் பலி-

elephantதிருகோணமலை, மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வயோதிப பெண் தோப்பூருக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வழியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வந்த 70வயதான பெண் ஒருவரே யானை தாக்கி உயிரிழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி-

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீரை அள்ளுவதற்கு முற்பட்டபோதே கிணற்றினுள் விழுந்துள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அண்மையில் பெய்த மழையினால் கிணற்றில் நீர் நிரம்பியிருந்துள்ளது. அயலவர்கள் மற்றும் படையினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் உயிரிழந்திருந்ததாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

லயன் எயார் வானூர்தி எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன-

lion air documents (1) lion air documents (5)புலிகளால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன்எயார் வானூர்தியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1998 செப்டம்பர் 29ம் திகதி பலாலி வானூர்தி தளத்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில், மன்னார் – இரணைதீவு வான்பரப்பில் வைத்து இந்த வானூர்திக்கு மேற்படி அனர்த்தம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின்படி, இரணைத்தீவு பகுதியில் கடந்த 2013ம் ஆண்டுமுதல் தேடுதல் பணிகள் இடம்பெற்றன. அங்கிருந்து மீட்கப்பட்ட 72 பொருட்கள் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்-தயான் ஜயதிலக்க-

dayan jayatilakeஇலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் அபாயகரமான பிரதி விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறியுள்ளார். இறுதி போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்த டுவிட்டர் குறுஞ்செய்தி, ‘நடுநிலையற்றது’ என்றும், விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாதாரண இராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறிய தயான் ஜயதிலக்க, நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானத்திற்கு சர்வதேசத்திடம் ஆதரவு கோருவோம்-கூட்டமைப்பு-

mavai senathirajahஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்ற யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தினத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழராட்சி மாநாட்டின் சம்பவங்கள் இன்றும் எம் கண்முண்னே இருக்கின்றது. இதேபோன்று இதற்குப் பின்னரான தற்போதைய நிலையிலும் எத்தனையோ பல துன்ப, துயரங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. Read more

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 40ம் ஆண்டு நினைவுதினம்- 

ulaga thamilarachchi maanaadu1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 40ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 40ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.30அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், கஜதீபன், வேலுப்பிள்ளை சிவயோகன், அரியகுட்டி பரஞ்சோதி, பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்;. 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர்.

தமிழ் மாணவி விண்வெளி செல்ல தெரிவானமை தமிழ் இனத்திற்கு தனித்துவமான கௌரவம்-வலி மேற்கு தவிசாளர்-

விண்வெளிக்கு முதன்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது. இச் சந்தர்ப்பம் தமிழ் மங்கையருக்கு மிகமிக உயர்ந்த நிலையாகவே உள்ளது. தமிழ் இனம் தனித்துவமான பண்புகளை கொண்ட இனம் என்பதை எமது இனம் பல வடிவங்களில் பல காலங்களில் வெளிப்படுத்தி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. இவ்வாறே மீண்டும் ஒரு தடவை இவ் தமிழ் மாணவி எமது இனத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளார். இம் மாணவிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை அவர் மென்மேலும் உயர்வு பெற வாழ்த்துகிறேன்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை.

யாழ். கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்பு-

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று கடமைகளை பொறுப்பேற்கின்றார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இதற்கு முன்னர் செயற்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார. யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தின் பிரதம நிறைவேற்று ஜெனரலாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்hளர்.

பளை வரையில் பரீட்சார்த்த ரயில் ஓட்டம்-

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்திருந்தது. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவையை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீதி இடங்களுக்கான ரயில் பாதை புனரமைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது எழுதுமட்டுவாள்வரை முடிவடைந்துள்ளது என அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா-

யாழ். பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று(10.01.2014) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுவரும் இந்த பட்டமளிப்பு விழாவில், 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இன்றைய முதல்நாள் அமர்வுகளில் 707 பேருக்கும் நாளைய தினம் நடைபெறவுள்ள இரண்டாம் நாள் அமர்வில் 662 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணையவில்லை- ஜோன் அமரதுங்க –

தாம் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாகவும், சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தமது விஜயத்தை முடித்து நாடுதிரும்பிய பின்னர் ஊடகத்தினரிடம் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அதேநேரம் தமது விஜயம் தொடர்பில் தாம் எதிர்கட்சித் தலைவரிடம் இரகசிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக வெளியான செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஜோர்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட சிறப்பு தூதுக்குழுவினர் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜோர்டான் சென்றிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்திருந்தார். அங்கு அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பல்வேறு உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை-

சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கை வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இடையில் தொழிலாளர்கள் தொடர்பில் முதன் முறையாக உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய கூறியுள்ளார். வீட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, பணியாளர் உரிமைகளை இந்த உடன்படிக்கையின் மூலம் பேணுவதற்கு முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீனம் ஐ.நா பரிந்துரைக்கு இலங்கை ஆதரவு-

சகல இனத்தவர்கள் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ்சை நேற்று ஜெருசலேம் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திற்குள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது இஸ்ரேல் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இஸ்ரேல் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கான தீர்வாக 2 அரசாங்கங்களை உருவாக்கும் ஐ.நாவின் பரிந்துரைக்கு இலங்கை ஆதரவு வழங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு நிறைவு-

மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த தற்காலிக அமைய சுகாதார ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். சுகாதார ஊழியர் நியமனம் தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட வார்த்தமானி அறிவித்தலை கவனத்திற்கொள்ளாது தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கில் அசாதாரண சூழல் நிலவிய காலப் பகுதியிலும் தாம் சேவையாற்றியதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, மன்னார் மாவட்ட தற்காலிக மற்றும் அமைய சுகாதார ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். ஊழியர்களின் கோரிக்கையை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழியை அடுத்து மன்னார் மாவட்ட தற்காலிக, அமைய சுகாதார ஊழியர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை-

இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்திய உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆணைப்படி வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தை டெல்லியில் 7ம் திகதி சந்தித்து இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னால் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கலைஞரின் வேண்டுகோளை வலியுறுத்தினேன். இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். Read more

ஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் புதிய செங்கோல் வடமாகாண சபைக்கு

untitlednorthern-45 அங்குலம் நீளமாக இந்த செங்கோலினை சுழிபுரத்தினைச் சேர்ந்த சிற்பாசிரியர் க.சபாரத்தினம் உருவாக்கியுள்ளார். இந்தச் செங்கோல் பால் மரத்தினாலான தண்டம் செய்தல் வேண்டுமென்ற விதிக்கமைய முழுவடிவமும், வேப்ப மரத்தினால் ஆக்கப்பட்டு பனை, பூவரசு, மஞ்சள்நுணா, கருங்காலி என்ற நான்கு மரங்களையும் இணைத்து வடக்கின் இயற்கை வளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  செங்கோலின் பீடம் 2.1 அங்குல விட்டத்தில் பித்தளை உலோகத்தினால் கலை வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உருவாக்கம் பெற்ற இனக்குழுமத்தின் தோற்றத்தின் அடிப்படை நாகமரபு என்பதை காட்டும் வகையில் பிணைந்த நாகம் 2.5 அங்குலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.  Read more

untitled‘நாம் எப்போதும் சமாதானத்துக்கு உதவுவோம். இரு நாட்டுக் கொள்கைக்கு நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள். பொதுமக்களின் நன்மைக்காக சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்நாட்டு ஜனாதிபதி சிமொன் பெரஸூக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது ‘இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு Read more

யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இருவரும் பயங்கரவாதிகளே- பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர

Sarath1அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பிரிவினைவாத சதித்திட்டத்திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்கள் இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள். Read more

சங்கானை சரன்னிய அச்சக அனுசரணையுடன் வெளியீட்டு வைபவம்-

சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் சங்கானை சரன்னியா அச்சக அனுசரணையுடன் இன்றையதினம் (09.01.2014) மதியம் 12.30அளவில் ஓம் நமச்சிவாய பிரார்த்தனை சிவலிங்க திருவுருவ மந்திர லிகிதஜப பத்திரம் வெளியீட்டு வைபவமும் பிரார்த்தனையும் யாழ். சித்தன்கேணி ஸ்ரீசிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தான மண்டபத்தில் சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ. சபா.வாசுதேவ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .ஈ.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவஸ்ரீ.ந.பிரசாந்த குருக்கள் (பிரதம குரு உடுக்கியவளை பிள்ளையார் கோவில்), வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி காசிநாதன் நிருபா, வலி மேற்கு பிரதேச இந்து சமய கலாச்சா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி ஜனார்த்தனன் அகல்யா, வலி மேற்கு பிரதேச கலாச்சார அபிவிருத்தி உதவியாளர் திரு பொன்னுத்துரை. சந்திரவேல், வலி மேற்கு பிரதேச முன்பள்ளி இனைப்பாளர் செல்வி நா.நிரஞ்சன, சித்தன்கேனி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தான பரிபாலன சபை தலைவர் திரு தி.இராஜ்குமார், சங்கானை வர்த்தக சங்க தலைவர் திரு.ஆ.குலசேகரம், இந்து மகாசபை உறுப்பினர் திரு.அ.சிவானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வானது. இந்து ஆலயங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும் ஆலயங்களில் இடம்பெற்றுவரும் திருட்டுச் சம்பஙவங்கள் இல்லாது போக்குவதற்கும் மக்களின் வாழ்வு சுபீட்சமடையவும் நடாத்தப்பட்டுள்ளது.

பிரமாண்டமான மீன்சந்தை அமைக்க வலிமேற்கு பிரதேச சபை நடவடிக்கை-

யாழ். வலி மேற்கு சங்கானைப் பகுதியில் பல மில்லியன் செலவில் பிரமாண்டமான மீன் சந்தை ஒன்று அமையவுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது தனது வருமானத்தில் பெரும் பங்கினை சங்கானை பகுதியின் வாயிலாகவே பெற்று வருகின்றது இந்நிலையில் புறநெகும திட்டத்தின்கீழ் பல மில்லியன் ருபா செலவில் பிரமாண்டமான மீன்சந்தை சங்கானையில் புதிய இடத்தில் அமையவுள்ளது.
ஏற்கனவே சங்கானைப் பகுதியில் காணப்படும் மீன் சந்தையானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. இதேவேளை அருகில் இந்து ஆலயம் கடைத்தொகுதிகள் மற்றும் பிரதேச சபை நூலகம் என்பன அமைந்துள்ளன. இந்நிலையில் சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றால் இவ் சந்தைப் பகுதியை மாற்றுமாறு வலி மேற்கு பிரதேச சபை தவிசாளா திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது Read more