Header image alt text

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம்

pajanipajani1வலி மேற்கு பிரதேச சபைத்த் தவிசாளரின் 100 பஜனைப்பாடசாலை திட்டம் கடந்த 06.06.2014 அன்று வலிமேற்கில் வழக்கம்பரை முத்துமாரி அம்பாள் கோவிலில் ஆரம்பித்து வைக்கப்ட்டது. ,ந் நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்களும் கலந்து கொண்டார் ,ந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கான அறநெறி நூல்களை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார். Read more

வலி மேற்கு பிரதேச சபையில் சர்வதேச சுற்றாடல் தினம் –

eveners22014 11.06.2014 அன்று மாலை 2.30 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் தலைமையில் வேள்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி ச.விஜித்தா அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச வேள்விசன் முகாமையாளர் ஐ.மைக்கேல் அவாகளும் கௌரவ விருந்தினர்களாக சங்கானை செலான் வங்கி முகாமையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் சுற்றுப்புற சூழல் தினத்தினை ஒட்டி பாடசாலை மாணவாகளிடையே பல போட்டிகள் விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் நடைபெற்ற போடடிகளில் வெற்றி பெற்ற 200க்கும் அதிகமான மாணவர்கள் பரிசில்களை பெற்றுக் கொணட்னர். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையினை சபை உறுப்பினர் ஆகிய ந.பி.இராஜ்குமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ஆசியுரையினை சர்வதேச இந்துகுருமார் ஒன்றிய தலைவரும் சித்தன்கேணி சிவன் ஆலய பிரதம குருவுமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமை உரையினை நிகழ்த்தினார் Read more

ஐநா குழுவுக்கான அனுமதியை நாடாளுமன்றமே முடிவு செய்யும்

aryasinghஇலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலன்னறுவையில் ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை அடுத்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்ததை அடுத்தே மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து வந்துள்ளது. இதனிடையே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு தாம் தாங்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஜெனீவாவிலுள்ள ஐ நா அலுவலங்களுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்க அறிவித்துள்ளார். உள்நாட்டில் இணக்கப்பாடு, பொறுப்புக் கூறுதல், தேசத்தை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், இலங்கை மக்களின் நலன் குறித்து உண்மையாக ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், பன்னாட்டு அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து தாங்கள் செயல்பட்டு வருவதாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று இலங்கைத் தூதரின் அறிக்கை கூறுகிறது. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரது முன்னெடுப்பு, காழ்ப்புணர்ச்சி மிக்கது, நாட்டில் உருவாக்கப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாடு குந்தகத்தை ஏற்படுத்தும் அவர்களின் முன்னெடுப்பு சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, தொடர்ச்சியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. அந்தத் தீர்மானம் தெளிவில்லாமல் இருப்பதால், அது அபாயகரமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தூதர் கூறுகிறார். இலங்கையில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும், தீவிரவாதம் மற்றும் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை ‘மனித உரிமைகள் மீறல்கள்’ குறித்து விசாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையின் மூலமே உண்மைகள் தெரியவரும் என நவநீதம்பிள்ளை தொடர்ந்து வாதிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபை இணையத்தளம் திருட்டு

untitledவடமாகாண சபையின் உத்தியோக பூர்வ வலைதளமான றறற.np.பழஎ.டம  என்ற இணையத்தளம் ‘ஹேக்’ திருடப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை (06) ஹேக் செய்யப்பட்டு இயங்காது இருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த பொழுது குறித்த இணையத்ளத்;தினை உபயோகப்படுத்துவது ஆளுநர் அலுவலகம் ஆகையினால் அவர்களிடம் கேட்குமாறு கூறினார். இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது வடமாகாண ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.

கபடிப் போட்டிகளில் பங்குபற்ற இரு அணிகளுக்கு தடை  .

imagesCALOFTBZவடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மே மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற 19 வயதுப் பிரிவு ஆண்கள் கபடிப் போட்டி இறுதிச் சுற்றில் இரு வீரர்களுக்கிடையில் முரண்பாடு வரவே, இரு அணி வீரர்களும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டனர். தொடர்ந்து இந்த சண்டை பெரிதாகி இரு அணிகளின் ஆதரவாளர்களும் சண்டையிட்டுக்கொள்ள, இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டு மிகுதிப் போட்டிகள் முடிவுற்றன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தீர்மானம் எடுக்கும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழில் இடம்பெற்றது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மேற்குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, மேற்குறித்த பாடசாலைகளின் அணிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக வடமாகாணக் கபடி அணிகளிலிருந்து மேற்குறித்த இரு பாடசாலை அணிகளையும் நீக்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டு, அதனை அனைவரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டதாக சத்தியபாலன் மேலும் தெரிவித்தார்.

சீட்டு பிடிப்பவர்கள், மீற்றர் வட்டிக்காரர்களுக்கு தடை.

imagesCA4NG5WZவலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் வலி. தெற்குக்கு உட்பட்ட சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபையினால் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தை வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில், மீற்றர் வட்டிக்காரர்களும், சீட்டுப் பிடிப்பவர்களும் வியாபாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் அதனால் வியாபாரிகள் தற்கொலை செய்தல் மற்றும் தொழிலில் இருந்து நீங்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்மையினால் அதனைக் கருத்திற்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தக் கட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிப்படையப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரமருக்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்.

imagesCAZPNLQVஇந்திய பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு அவரை சந்தித்து பேசியது மிகவும் திருப்திகரமான அனுபவமாக இருந்தது என்று பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பிரதமராக கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  நவாஸ் மற்றும் மோடி ஆகியோர் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்த மோடியின் நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு காணப்பட்டது. ஆசியாவில் அண்டை நாடுகளுடனான உறவில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. இந்தியா வந்து சென்றது திருப்திகரமான அனுபவமாக உள்ளது. அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துகளையும் பரிமாறிக் கொண்டது மிகவும் பயனுடையதாக இருந்தது என்று தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் 195பேர் சாட்சியமளிப்பு .

unnamed 4கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு திங்கட்கிழமை (9) நண்பகலுடன் நிறைவடைந்தது. விசாரணையின்போது 195பேர் சாட்சியமளித்தனர் என்று ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். காத்தான்குடியில் 105பேரும், மண்முனைப் பற்றில் 90பேரும் சாட்சியமளித்துள்ளனர். மேலும் 211 புதிய விண்ணப்பங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. Read more

இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதாவுக்கு எதிராககோசங்கள் ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு- கொழும்பில்

M1a(740)இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் மோடிக்கு எதிராக அரசாங்க ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என வலியுறுத்தி தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரது உருவப்பொம்மையும் எரியூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்துவிட்ட போதும் பயங்கரவாதத்தாலும் போரினாலும் உண்டான வடுக்கள்  இன்னும் மாறவில்லை.  நவநீதம்பிள்ளை 

navipillai aluvalagamஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் ஆரம்ப உரையில் பொறுப்பு கூறுதலையும் அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும்  இந்த பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான  விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம்  நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினருக்கு பல நிபுணர்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களும்  உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளனர். நம்பகமான உண்மையினை கண்டறியும்  செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை  பயன்படுத்திக்கொள்ளுமாறு  நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன்;.
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை  சுட்டிக்காட்டியதால் தான் முகங்கொடுத்த விமர்சனங்களை பற்றி  தனது உரையில் குறிப்பிட்ட அவர், பூகோள விழுமியங்களின் கொள்ளை ரீதியான அமைப்பை பாதுகாப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கிய நன்மை உண்டாகுமென  கூறினார். Read more

வட கிழக்கு ஆளுநர்கள் அதிகாரங்களை தமக்கேற்றவகையில் பயன்படுத்துகிறார்கள்-ஹக்கீம்-

Hekeemவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ள ஆளுநர்கள் அதிகாரங்களை தமக்கேற்றவகையில் பயன்படுத்துவதாக  நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தி அதிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முதலமைச்சர்கள் பிரச்சினையல்ல ஆனால் ஆளுநர்களுக்கே பிரச்சனை உள்ளது. தெற்கில் உள்ள ஆளுநர்களுக்கு முதலமைச்சர்களுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் இந்த முரண்பாடு தொடர்ந்தும் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு ஆளுநர்கள் தமக்குள்ள அதிகாரங்களை தமக்கு ஏற்றவாறு  பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.  இதனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல் காணப்படுகின்றது. ஒய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகளையே ஆளுநர்களாக நியமிக்கின்றனர். தெற்கில் அந்த நிலை குறைவாகும் என்றார் அவர்.

கட்டுநாயக்க – கராச்சி விமான சேவை இரத்து-

hijack-plane-in-attackகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்குச் செல்லும், இன்றைய விமானப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலையடுது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் பயணிக்கவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை கூறுகின்றது. விமான நிலையத்தில் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தபின்பே கராச்சி வரையான விமான போக்குவரத்து இடம்பெறும் என இலங்கை விமான சேவை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் காராச்சி விமான நிலையத் தாக்குதலை தாம்தான் நடத்தியதாக பாகிஸ்தான் தலிபான் பிரிவினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கிராமங்கள்மீதான குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான் அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்று தலிபான் அமைப்பு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கராச்சி விமானநிலையத் தாக்குதலையடுத்து, சென்னை விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

சார்க் நாட்டு தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும்: பிரணாப் முகர்ஜி-

Moodyசார்க் நாடுகளின் தலைவர்களுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து பேணப்படும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அத்துடன், தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும். அழைப்புவிடுத்த குறுகிய காலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடர விரும்பும் அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை சகித்துக்கொள்ள முடியாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்-

வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 2001ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகரசபையில் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்தபோது தற்காலிக நியமனங்களில் பணியாற்றியவர்களின் பணிக்காலம் நிறைவடைந்துள்ளதாக நகரசபை செயலரினால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கு நிரந்த நியமனத்தை வழங்குமாறு கோரி இவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படாத போதிலும் இருவர் தொழில் வாய்ப்பின்மை மற்றும் கடன் சுமை காரணமாக வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளமையால் அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா கிளை இணைப்பாளர் ஆர். சித்திரன் தெரிவித்துள்ளார். பல்வேறு முயற்சிகளினால் பலன் கிடைக்காமையால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர் இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அனைத்து சுகாதார ஊழியர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருப்பதாக கூறினார்.

தமிழக மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்திய தூதரக அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புக்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் இப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்திய அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பிரதேசத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன இலங்கை மகன் சென்னையில் மீட்பு-

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12வயது மகனை அவரது தந்தை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருத்தித்துறையை சேர்ந்த சிவபாலன் (44) என்பவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். இந்நிலையில், தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ம்திகதி புகார் அளித்தார். இந்த நடவடிக்கையின்போது பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்ரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர். இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பவித்ரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பொலிஸார் பவித்ரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர்.

அரசு பக்கம் தாவ மாட்டோமென ரவி, பாலித்த தெரிவிப்பு-

தாம் அரசாங்க கட்சியில் இணைவது தொடர்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க கட்சியுடன் இணையப் போவதாக வெளியான தகவல் பற்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்துடன் இணையப்போவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அத தெரண ரவி கருணாநாயக கூறுகையில், அரசாங்கத்துடன் இணைய வேண்டிய எந்தவெரு தேவையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வாகரையில் கைக்குண்டு மீட்பு-

மட்டக்களப்பு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட புச்சாக்கேணியில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்திலிருந்து கைக்குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. நடமாடும் சேவை நிகழ்வொன்று குறித்த கட்டத்தில் இன்று நடத்தப்படவிருந்த நிலையிலேயே இந்த கைக்குண்டை  மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று துப்பரவு நடவடிக்கைகள் குறித்த கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த கைக்குண்டை பொலிஸார் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பரந்தன் சந்தியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி-

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் இன்றையதினம் முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிந்துள்ளனர். ட்ரக் ஒன்றும் மோட்டார் சைக்களில் ஒன்றும் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா. விசாரணைக் குழு நீதியைப் பெற்றுத் தருமென கூட்டமைப்பு நம்பிக்கை-

1719856666tna3ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் சர்வதேச விசாரணைக்குழு ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை அரச படைகளினால் கொடூரங்களுக்குள்ளான அப்பாவித் தமிழர்கள் இந்த விசாரணைக் குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டத்தொடரை நாளை மறுதினம் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான தமது அலுவலகத்தின் விசாரணைக்குழுவை நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையிலே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளிக்க தயார்-எரிக் சொல்ஹெய்ம்-

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 2009 மே 17ம் திகதி புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரிடமிருந்து தாம் சரணடைய வேண்டும் என நோர்வேஜியர்களுக்கும், ஏனையோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. எதையும் செய்ய மிகவும் தாமதமாகி விட்டதென்று நாம் அவர்களுக்கு கூறினோம். எனினும், வெள்ளைக்கொடியை உயர்த்திக் கொண்டு செல்லும்படி ஆலோசனை வழங்கினோம். மே 18ல் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. இலங்கைப் போர் மிகப்பெரிய விலை கொடுத்தே வெற்றி கொள்ளப்பட்டது. இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவினாலும், அமெரிக்காவினாலும் வேறு பல இடங்களில் இருந்தும் என்னிடம் கேட்டார்கள். போரில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அது மிகப்பெரிய விலை. இராணுவ நடவடிக்கையில்லாமல், அமைதிப் பேச்சுக்களின் மூலம் போருக்கு தீர்வு கண்டிருக்க முடியும். 2015க்கு முன் வெளிவரவுள்ள எனது நூலில் நான் பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களையும், புலிகளினதும், இலங்கை அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் வெளியிடவுள்ளேன் என சொல்ஹெய்ம் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா விசாரணை குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் தலைமையேற்பு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணைக் குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் ஒருவர் தலைமை தாங்க உள்ளதா ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகமும். மாவட்ட பிரதம நீதவானுமான டேமி சில்வியா கார்ட்ரைட் (வயது 70) என்பவரே இலங்கை குறித்த சர்வதேச விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். ஏன்றும் கூறப்படுகிறது. அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிதானிய பிரஜையை நாடு கடத்த உத்தரவு-

கடந்த 29 வருடங்களாக சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாக கூறப்படும் பிரித்தானிய பிரஜையொருவரை நாடுகடத்துமாறு கண்டி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். 74 வயதான ரொகர் வோன் சிமித் என்பவரை அக்குறனையில் வைத்து கைதுசெய்த அலவத்துகொடை பொலிஸார், மிரிஹான தடுப்பு நிலையத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக  ஒப்படைத்தனர். இந்நிலையில் கண்டி மேலதிக நீதவான் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார். 

இந்திய மீனவர்கள் மன்னாரிலும் நெடுந்தீவிலும் கைது-

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் 32 பேரை 08 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 42 பேரை 8 படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றுமாலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக் கூறி பாரிய நிதி மோசடி-

தென் கொரியாவில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறி பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளம் ஒன்றை உருவாக்கி இவர்கள் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கொள்ளுப்பிட்டியில் நபரொருவர் தனது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுடன் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் இணையத்தளத்தை நடத்திச் சென்ற ஒருவரும் கைதாகியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பெண் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிகப்பு அறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் – ஜி.கே. வாசன்-

மீனவர்கள் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2 வார காலத்துக்குள் மீனவர் சிறைப்பிடிப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை இடைநிறுத்தம்-

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா பஸ் டிப்போவினால் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவில் இலங்கையர்கள்மீது கண்காணிப்பு-

மலேசியாவில் உள்ள இலங்கையர்கள், புலிகளுடன் தொடர்புகளை பேணுகின்றனரா? என்பது தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக மலேசியாவின் பிரதி அமைச்சர் என் ஜூனைதி துவாங்கு ஜாபா தெரிவித்துள்ளார். அண்மையில் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு மூவர் கைதானதைத் தொடர்ந்து, இந்த கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் உள்ள 4000க்கும் அதிகமான இலங்கை அகதிகளை, விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக மலேசிய காவற்துறை தலைமை அதிகாரி கூறியிருந்தார்.

தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வலியுறுத்த வேண்டும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

1இந்தியாவின பிரதமர் நரேந்திரமோடிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பிலேயே தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் மற்றும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமையினை நாம் நல்லதொரு தொடக்கமாகவே கருதவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்சென்று 13 பிளஸ் என்ற விடயத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பரவலாக்கல் மற்றும் இருநாட்டு மீனவர் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். Read more

ஐ.நா. புதிய மனித உரிமை ஆணையாளர் தெரிவு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் 50வயதான அல் ஹூசைன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர்.

யாழில் வீட்டு சமையல் அறையினுள் பதுங்கு குழி கண்டுபிடிப்பு-

யாழ். பருத்தித்துறை பகுதி விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்றுமாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது 8அடி ஆழம் 6 அடி அகலமும் கொண்ட பதுங்குகுழியினை கண்டுபிடித்துள்ளனர். குறித்த வீடானது கடந்த 95ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் பயன்பாட்டில் இருந்த காரணத்தினால் இந்த பதுங்கு குழி புலிகளால் அமைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் கூறியுள்ளனர். இந்த வீட்டில் தற்போது குடியிருப்பவர்கள் வாடகைக் இருப்பவர்கள் எனவும் வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதிவுகள் இன்றி நாடற்றவர்களாக 17000 இலங்கை அகதிகள்-

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வாழ்கின்ற 17ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை சிறார்கள் நாடற்றவர்களாக இருப்பதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அகதி முகாம்களில் பிறந்த இவ்வாறான சிறார்களுக்கு இதுவரையில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவோ, அல்லது இலங்கையின் குடியுரிமை பெறுவதற்கான பதவிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. ஈழ அதிகளின் புனர்வாழ்வு மையத்தின் நிறுவனர் எஸ்.சீ.சந்திரஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழக முகாம்களில் நடமாடும் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அகதிகளின் பதிவுகளுக்கான விண்ணப்பங்களை சேகரிக்க முடியாதிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கை-

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்று எதிர்வரும் 12ம் திகதி 26வது ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வில்போது, இந்த அறிக்கை குறித்த விசேட விவாதம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் இடம்பெயர்ந்தோருக்கான உரிமைகள் குறித்த விசேட அறிக்கையாளர் சலாகா பெயானி இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். இதில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற காணி சுவீகரிப்பு, மீள்குடியேற்ற தாமதம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போனார் தொடர்பில் இன்றும் சாட்சியப் பதிவு-

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் 2ஆம் நாளாகவும் இன்று நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ஆம் கட்ட சாட்சி விசாரணைகள் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நேற்று ஆரம்பமாகியிருந்தன. இந்த அமர்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2ஆம் நாளாக இன்றும் நடைபெற்றன. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக நேற்று 59பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 49 பேர் மாத்திரமே சமூகமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார். இதுதவிர புதிதாக மேலும் 16 பேரின் முறைபாடுகள் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் அமர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடிகாமத்தில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். கொடிகாமம் பகுதியில் நேற்றுமாலை ஏ.கே47 ரக துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த துப்பாக்கிகள் கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை வீட்டிலிருந்த 22வயதான இளைஞர் கொடிகாமம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது-

இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு கிழக்கே 120 கடல் மைல்கள் தொலைவில் இரண்டு படகுகளுடன் இலங்கை மீனவர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பிடித்திருந்த 750 கிலோகிராம் மீன்களும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களையம் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 73 இலங்கை மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு-

யுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியயத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய அதிகாரிகளால் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையீட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். யுக்ரெயினின் கிழக்கு நகரான லகான்ஸ்கில் கடுமையான மோதல்கள் இடம்பெறும் நிலையில், அங்கிருந்த 1000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கீவ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் குறித்த இலங்கை மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு முகாம் இலங்கை அகதிகள் இடமாற்றம்-

தமிழ் நாட்டின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 இலங்கை அகதிகள் புதிதாக திறக்கப்பட்ட செய்யாறு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் ஏ.ஞானசேகரன் இதனைத் த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஸ், நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் இந்த புதிய முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் புதிதாக மருத்துவ நிலையம் திறந்து  வைபவபு

untitleduntitled6untitled305.06.2014 அன்று தொல்புரம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ நிலையம் திறந்து வைக்கும் வைபவம் இடம் பெற்றது. இவ் வைபவத்தில் வட மாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராகவும் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும் போது இவ்வாறான அழப்பரிய பணியினை மேற்கொண்ட புலம் பெயர் உறவான பொறியியலாளர் பட்சம் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆரமப வைத்திய சாலையின் தேவையானது இந்த இடத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தப்பகுதி எமது பிரதேசத்தின் மக்கள் தொகை நிறைந்த பகுதி இது மட்டுமல்லாது அன்மையில் மீளக்குடியமர்ந்த மக்களை கொண்டுள்ளதாகவும் இப் பகுதி அமைந்துள்ளது. Read more

சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழா

untitled4untitled5untitled 1untitled 2சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழாகடந்த 05.06.2014 அன்று சித்தன்கேணி வட்டு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் உரையாற்றும் போது
இன்று இந்த கோட்ட மட்ட முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய சிறார்களே நாளைய நாட்டின் தலைவர்கள் இவர்களை செம்மையான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த சமூகத்தில் உள்ள அனைவரையும் சார்ந்ததாகும் இவ் சிறார்கள் இன்று எதிர்நோக்கும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளமானவை இவற்றிலிருந்து சிறார்களை மீட்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. குறிப்பாக இன்றைய சிறார்கள் பலவேறுவகையான துஸ்பிரயோகம் மற்றும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர். சிறுவர் தொழிலாளரகவும் உள்ளனர். Read more