வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய மணிவிழா-
 யாழ்ப்பாணம் வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் மணிவிழா நிகழ்வுகள் இன்று (19.09.2014) வெள்ளிக்கிழமை தலைவர் திரு சாந்தலிங்கம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் மணிவிழா நிகழ்வுகள் இன்று (19.09.2014) வெள்ளிக்கிழமை தலைவர் திரு சாந்தலிங்கம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் சமூகமளிக்க முடியாமற் போனதால் அவரது இடத்திற்கு கழகத்தின் (புளொட்) வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் மத்தியகுழு உறுப்பினருமான திரு சிவநேசன் (பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
(படங்கள் இணைப்பு) Read more
 
		     
  
  
  ஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்- பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்- கொண்டார். இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறு என்பது குறிப்பிடத்தக்கது
ஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்- பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்- கொண்டார். இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறு என்பது குறிப்பிடத்தக்கது 1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் மரணத்துக்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என குற்றஞ்சாட்டி, யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் மரணத்துக்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என குற்றஞ்சாட்டி, யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. பிரித்தானியாவிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின.
தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. பிரித்தானியாவிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின.  

 யாழ். மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன், முன்னெடுக்கப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு கோணவளை எனும் பகுதியில் து-150 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக இளவாலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கள் பொது மக்களுடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவீட்டு பணியை மேற்கொள்ள விடாது தடுக்கும்வகையில் நில அளவை உபகரணங்களை சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தினர். இந்த கடும் எதிர்ப்பின் காரணமாக நிலஅளவை திணைக்கள ஊழியர்கள் தமது பணியினை கைவிட்டுச் சென்றனர். இன்று அளவீடு செய்யப்படவிருந்த குறித்த 4 பரப்பு
யாழ். மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன், முன்னெடுக்கப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு கோணவளை எனும் பகுதியில் து-150 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக இளவாலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கள் பொது மக்களுடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவீட்டு பணியை மேற்கொள்ள விடாது தடுக்கும்வகையில் நில அளவை உபகரணங்களை சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தினர். இந்த கடும் எதிர்ப்பின் காரணமாக நிலஅளவை திணைக்கள ஊழியர்கள் தமது பணியினை கைவிட்டுச் சென்றனர். இன்று அளவீடு செய்யப்படவிருந்த குறித்த 4 பரப்பு   ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹ_ஸைனை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்றையதினம் காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹ_ஸைனை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்றையதினம் காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.