Header image alt text

வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புகளின பிரதிநிதிகளின் சந்திப்பு-

vavuniya vadakku kamakkaara (6)வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அழைப்பையேற்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களுடன் வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ ம.தியாகராசா, பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில்  வவுனியா வடக்குப் பிரதேசத்தில் காணப்படும் விவசாயக் குளங்களின் புனரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் கமக்கார அமைப்புப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது தொடர்ந்து கால்நடை, பழச்செய்கை, ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா வடக்குப் பிரதேசத்தில் அவசியமாகத் திருத்தப்படவேண்டிய குளங்கள் தொடர்பாகவும், சிறு குளங்களை இணைத்து பாரிய அளவிலான ஒர் நீர்பாசனத திட்டத்தை இப்பிரதேசத்தில் அமைக்கப்படவேண்டும் எனவும் திட்ட முன்மொழிவொன்றை இப்பிரதேச மக்கள் சார்பில் வடக்கு மாகாணசபை அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களிடம் முன்வைத்தார்.

vavuniya vadakku kamakkaara (1)vavuniya vadakku kamakkaara (7)vavuniya vadakku kamakkaara (8)vavuniya vadakku kamakkaara (6)vavuniya vadakku kamakkaara (2)vavuniya vadakku kamakkaara (4)

 

வவுனியா ஜினியஸ் பாலர் பாடசாலையில் கண்காட்சி-

வவுனியா பண்டாரிகுளம் ஜினியஸ் பாலர் பாடசாலையில் கண்காட்சி நிகழ்வு நேற்று 03.11.2014 திங்கட்கிழமை மேற்படி பாலர் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் அதிதிகளாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

vavuniya ginisam paadasaalai (5)vavuniya ginisam paadasaalai (13)vavuniya ginisam paadasaalai (1)vavuniya ginisam paadasaalai (6)vavuniya ginisam paadasaalai (4)vavuniya ginisam paadasaalai (3)vavuniya ginisam paadasaalai (2)vavuniya ginisam paadasaalai (9)vavuniya ginisam paadasaalai (8)

உலக வர்த்தக மைய கோபுரம் மீண்டும் திறப்பு-

2imagesCAVTMIWPulaga varthaka maiyam001ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான நிவ்யோர்க் உலக வர்த்தக மையத்தின் பிரதான கோபுரங்கள் 13வருடங்களின் பின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு பகுதியின் பணியாளர்கள் முதலாவது கோபுரத்திலுள்ள 104ஆவது மாடியிலுள்ள தமது அலுவலகங்களுக்கு திரும்பியுள்ளதுடன் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்திருத்தப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் தற்போது அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடங்களாக கருதப்படுகின்றன. அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் 60 சதவீத பகுதி அமெரிக்க அரசின் பொது சேவைகளுக்கான நிர்வாக செயற்பாடுகளுக்காக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. 541மீட்டர் உயரம் கோபுரத்தில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுகூடம் மற்றும் அரும்பொருட்காட்சியகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஓமந்தைப் பகுதி மாணவனை காணவில்லையென முறைப்பாடு-

Omanthai paguthiவவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜே.ஜெயகெனடி தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை சூரன்போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் என்ற 16வயது மாணவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் ஜெயசித்திரா நேற்று தம்மிடம் முறைப்பாடு செய்தபோது தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை சூரன்போருக்காக வவுனியா நகருக்கு சென்ற எனது மகன் வியாழக்கிழமை வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நின்றதை பலர் கண்டுள்ளனர். அன்று இரவு 8 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளான். ஆனால் இன்று வரை வீடு வந்து சேரவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ளான் என தாயார் கூறியுள்ளார்.

தண்ணீர் பெருக்கெடுப்பினால் மீட்பு பணிகள் இடைநிறுத்தம்-

koslanda_image_005கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலவும் மோசமான காலநிலையுடன் பேருகலை மலையிலிருந்து இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்தமையால் மீட்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கி மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஏழாவது நாளாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரத்துக்குள் அங்கு மோசமான காலநிலை நிலவியது. இதனையடுத்தே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கு மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

அடிப்படைத் தேவைகளுக்காக காத்திருக்கும் கொஸ்லாந்தை மக்கள்-

meetiyapeththa man sarivu (1)பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உணவு சார்ந்த தேவைகளை அரசாங்கமும், நிறுவனங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களும் நியாயமான அளவிற்கு பூர்த்திசெய்து வருகின்றனர். இருந்தபோதிலும் தற்போது அங்கு அடிப்படையான மற்றும் அவசியமான தேவையாக உள்ள குளிர் பிரதேசத்திற்கு உகந்த படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள், குளிர்கால உடைகள், நில விரிப்புகள் மற்றும் உடுபுடவைகள், தான் மிகமிகக் குறைவாக உள்ளது. அதாவது உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவும் அரிதாகவுமே இவை கிடைக்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களையும் போதியளவில் வழங்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களும், அவர்கள் சார்ந்த சமூக அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்களின் விபரங்கள்-

kkoslantha_bodyபதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவில் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்த 23 வயதுடைய யுவதியும் அவரது கணவரும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் என நம்பப்படுபவர்களது விபரம் வருமாறு,

1. சந்திரவதனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்சிதா
5. சுஜன்
6. பாலசுப்ரமணியம்
7. பவானி
8. ரஞ்ஜிதம்
9. இராஜகௌரியும் அவரது கணவரும் (தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்தவர்கள் )
10. ராமன்
11. திலகலட்சுமியும் அவரது கண­வரும்
12. விதுசிகா
13. முத்து
14. செல்வநாயகி
15. தங்கவேல்
16. குடும்பநலத் தாதியும் அவரது மகனும் மகளும் மகனின் மனைவியும்
17. ருத்திரன்
18. மின்னல் என்றழைக்கப்படுபவர்
19. மாரியப்பன்
20. மாரியாயி
21. மேசன் வேலை செய்பவரும் அவரது மனைவியும்
22. தெய்வானை
23. பிரகாஷ்
24. லீலாவதி
25. மாரியாயி
26. ஆர்னோல்