Header image alt text

கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை-

Kovilkulam sivan kovilil  (1)வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர்நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (06.11.2014) மதியம் 12.00 மணியளவில் கோவில்குளம் சிவன் கோவிலில் நடைபெற்றது. உயிர் நீத்த மக்களின் ஆத்மா சாந்திக்கான இவ் பிரார்த்தனை நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), நகர சபையின் செயலாளர் திரு சத்தியசீலன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மூத்த ஊடகவியலாளர் திரு மாணிக்கவாசகம், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகுமார்(கண்ணா), மக்கள் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் திரு றோய் ஜெயக்குமார், கண்ணகி தேவராஜா ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Kovilkulam sivan kovilil  (20)Kovilkulam sivan kovilil  (18)Kovilkulam sivan kovilil  (16)Kovilkulam sivan kovilil  (13)Kovilkulam sivan kovilil  (11)Kovilkulam sivan kovilil  (10)Kovilkulam sivan kovilil  (9)Kovilkulam sivan kovilil  (8)Kovilkulam sivan kovilil  (2)Kovilkulam sivan kovilil  (1)

வவுனியா தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் வாசிப்பு மாத நிகழ்வு-

vavuniya thamil pradesa sabaiyin (1)வவுனியா தமிழ் பிரதேச சபையினரால் வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்றுக்காலை (05.11.2014) 09.30 மணியளவில் நடத்தப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் உரைநிகழ்த்தினார். அவர் தனதுரையில், வவுனியா தமிழ் பிரதேச சபையின் செயற்பாடானது வவுனியாவின் ஏனைய பிரதேசசபையினை விட முன்மாதிரியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வருவதை கடந்த இரு வருட நிகழ்வில் கலந்து கொண்டபோது என்னால் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு முன்மாதிரியாக செயற்பட்ட இச்சபையின் தவிசாளர், உபதவிசாளர், செயலாளர், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை கிராம மட்டத்திற்கு எடுத்துச்சென்று கிராம மக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்தார் அத்தோடு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஊடாக 2015ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராமப்புர வீதிகளை மேம்படுத்துவதற்கான நிதியினைக் கோருவதற்கு பிரதேச சபை உறுப்பபினர்கள் முன்நின்று செயற்பட வேண்டும். வவுனியா மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்குமாகாணசபை உறுப்பினர் நால்வரிடமுமிருந்து வவுனியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒருகோடி இருபது லட்சம் ரூபா நிதி பயன்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டிலும் இவ்வாறான நிதியினைப் பெற்று இம்மாவட்டத்தினை வளர்ச்;பாதையில் கொண்டு செல்வோம் என்றார். அத்துடன் வவுனியா பிரதேசசபையால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் அவர் வழங்கி கௌரவித்தார்.

vavuniya thamil pradesa sabaiyin (1) vavuniya thamil pradesa sabaiyin (3) vavuniya thamil pradesa sabaiyin (4)

மண்சரிவு அபாயம்: 2521 பேர் 20 முகாம்களில் தங்கவைப்பு-

malyakamநுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களை பரிசோதனை செய்வதற்காக, தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுனத்தை சேர்ந்த ஆறு குழுக்கள் அடங்கிய அதிகாரிகள் தற்போது பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களான கொத்மலை இறம்பொடை, லெவன்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா, எலமுல்ல, இராகலை தியனில்ல ஆகிய பகுதியில் 564 குடும்பங்களை சேர்ந்த 2521 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்கள் 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

மனித உரிமை ஆணையகத்தால் முறைப்பாடுகள் பெறுவது குறித்து அரசாங்கம் அதிருப்தி-

vadapakuthi payanaththitkuஇலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தால் இன்னும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. எதுஎவ்வாறிருப்பினும் குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மறுக்கப்பட மாட்டாது என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்தது. இது ஒரு தரப்பினரின் நலன்கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள அமைச்சர் பீரிஸ், இதனால் நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியல் வெளியானது-

ulagil athikaaram mikkavar pattiyal (1)போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம்வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பராக் ஒபாமாவை பின்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் உலகின் பலம்வாய்ந்த 72 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது மோடி பிரதமராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் இந்த இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங், பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருஸெல்ப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர் போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் லஷ்மி மிட்டல் ஆகியோரும் உள்ளனர்.

ஆட்சியை மாற்றும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே-விக்கிரமபாகு-

sriநிலவும் ஆட்சியை மாற்றும் தலைவர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டம் ஏற்று கொள்ளக் கூடியது. எனக்கு ரணில் விக்கிரமசிங்க அவசியமில்லை. எனக்கு அவர் ஜனாதிபதியாக வந்தாலும் கூட அவர் குறிப்பிடதக்க சேவையினை தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எப்படியிருப்பினும், இந்த தருணத்தில் சர்வாதிகார, சமய கடும்போக்கு, ஆட்சியை கட்டுபடுத்த கூடிய ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நுவரெலியாவிற்கு விஜயம்-

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் நேற்று மலையகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிரு;தார். இதன்படி அவர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப்புறங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள குடியிருப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அவர் நேற்று பிரதி அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் ஆகியோரையும் சந்தித்திருந்தார். இதேவேளை நுவரெலியா பீட்ரூ தோட்டத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், மலையகத்தில் விசேட தேவை உடையோர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிகூறியுள்ளார்.

மங்கள சமரவீர எம்.பி. ஆளும்தரப்பிற்கு மாறுவது குறித்து பேச்சு-

ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி மங்கள சமரவீர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆளும் தரப்பிற்கு மாறி வெளிவிவகார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர எம்.பி. இந்த விஜயத்திற்கு முன்னரே ஜனாதிபதியையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டதிலிருந்து கட்சியின் தலைமைபீடத்துடன் மங்கள சமரவீர எம்.பி. முரண்பட்டு வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் ஆளும் தரப்பு பக்கம் மாறவிருப்பதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. Read more