நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் நடைபெறும்-மைத்திரிபால சிறிசேன-

santhirikka_maithiri_001தான் தற்போதும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர், பொதுச் செயலாளர் என எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்ட ரீதியில் நடைபெறவில்லை என இன்று கம்பஹா, ஹொரகொல்ல – பண்டாரநாயக்க சமாதி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பண்டாரநாயக்க ஜனன தினமான டிசம்பர் 8ம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளதாகவும் சமாதிக்கு அருகில் நின்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு சிறீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்ததாகவும் கட்சியில் தனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள், குழுக்கள் விடுத்த அழைப்பின் பேரில் பொது வேட்பாளராக போட்டியிட தான் முன்வந்தமை நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தான் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு கட்சியுடன் இணையவில்லை என்றும் பொது வேட்பாளராக பொது எதிரணியில் போட்டியிடுவதாகவும் கூட்டணி அரசியல் தனக்குப் புதிதல்ல எனவும் அவர் கூறினார். தன்னோடு இணைவதாகக் கூறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காண முடியும் என்றே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளதெனவும் நடக்க வேண்டியவை சரியான நேரத்திற்கு நடைபெறும் என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதுரை எம்.பி ஐ.தே.கவில் இணைவு, பிரதேச சபை உறுப்பினர் கட்சி தாவல்-

imagesCABMV835நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ஐ.தே.கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தாம் ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை, சேருவில பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இன்றுகாலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றியவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அருகில் அவர் அமர்ந்ததாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக கே.சிவலோகேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டதாகவும் தெரியவருகிறது.

சர்வாதிகாரத்தை உடைக்க 23ஆம் 24ஆம் திகதிகள் சரியான நாட்கள்-மைத்திரிபால-

maithripala_sirisenaசர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேநேரம் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்றையதினம் முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள். டிசம்பர் மாதம் 4ஆம் திகதியாகும் என்றும் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-

ratnapuraஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலத்திற்கு தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மண்சரிவு, கல்சரிவு, மண்மேடு சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இரத்தனபுரி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம்மீது துப்பாக்கிச்சூடு-

UNP office shootingகண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின் தேர்தல் காரியாலயம்மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கண்டி மாவில்மடயில் உள்ள கட்சி காரியாலயத்தின் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயத்தில் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் மாகாணமட்ட வலைப்பந்து அணியினர் – 2014

15 vayathu ani15 வயதுப்பிரிவு இரண்டாம் இடம் (நிற்பவர்கள் இடமிருந்து வலமாக)
திரு.ப.பிரதீபன் (ஆசிரியர்), கு.வினிஸ்ரா, ந.சுஜீபா, சு.கிசானி, த.தேன்மதி, ப.ஜானுயா, க.கேனுகா, ச.சுபிதா இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திருமதி.பா.அமிர்தகுமார் (ஆசிரியர்), திருமதி.சு.சற்குணராஜா (ஆசிரியர்), அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி, திரு.கு.சத்தியபாலன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர், வடமாகாணம்), திரு.சி.மனோகரன் (அதிபர்), திரு.ர.சிறிரமணன் (விளையாட்டுதுறைப் பொறுப்பாசிரியர்)  முன் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக இ.சிபிதா, பொ.குகதாரணி, மு.பாலசுமதி (அணித்தலைவர்), ,.கலைநிதி, த.தர்மலதா, அ.சோபிகா

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் மாகாணமட்ட வலைப்பந்து அணியினர் – 2014

17 vayathu ani17 வயதுப்பிரிவு முதலாம்; இடம் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக செல்வி.ந.யசோதா (ஆசிரியர்), வா.வனிதா, அ.அமுதினி, நா.தனுஷா, ஞா.அபர்ணா, த.கஜிதா, திருமதி. ப.லயந்தினி (ஆசிரியர்) இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திருமதி.பா.அமிர்தகுமார் (ஆசிரியர்), திரு.கு.பாலமுருகன் (உபஅதிபர்), அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி, திரு.கு.சத்தியபாலன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர், வடமாகாணம்), திரு.சி.மனோகரன் (அதிபர்), திரு.ர.சிறிரமணன் (விளையாட்டுதுறைப் பொறுப்பாசிரியர்)  முன் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக கோ.யுனிஸ்ரா, ச.சோபிகா, கு.தேவஅனுசியா, சு.சர்வகுமாரி (அணித்தலைவர்), நா.ஜீவிதா

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சை-2014

scholarshipயா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றோர் மாணவர் விபரம் இடமிருந்து வலமாக திரு.சி.மனோகரன் (அதிபர்), இ,.ஹருஜன், விமதுரிஷா, ஜெ.பவிந்தா, யோ.டிலக்சிகா, திருமதி.சு.கெங்காதரன் (ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர்)