Posted by plotenewseditor on 19 November 2014
Posted in செய்திகள்
நுவரெலியா மாவட்டத்தில் 2,073 பேருக்கு 15 தற்காலிக முகாம்கள்
நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 678 குடும்பங்களைச் சேர்ந்த 2073 பேர், இதுவரையிலும் தற்காலிக முகாம்களிலே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார். நுவரெலியாவில் 218 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் – ஐந்து முகாம்களிலும், கொத்மலை பிரதேசத்தில் 190 குடும்பங்களை சேர்ந்த 741 பேர் – மூன்று முகாம்களிலும், வலப்பனை பிரதேசத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 278 பேர் – இரண்டு முகாம்களிலும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் – ஒரு முகாமிலும், அம்பகமுவ பிரதேசத்தில் 147 குடும்பங்களை சேர்ந்த 587 பேர் -நான்கு முகாம்களிலும் இன்னும் சிலர் தங்களது உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். மொத்தமாக 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2,073 பேருக்கான நாளாந்த உணவு, கிராமசேவகர்கள் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தின் காலநிலை சீரற்ற நிலையில் காணப்படுவதால், இவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும், காலநிலை முற்றாக சீரடைந்த பின்னரே இவர்களை சொந்த வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குமாரசிரி குறிப்பிட்டார்.
பண்டைய கால பிரபுத்துவ முறை வேதனையளிக்கிறது – வாசுதேவ நாணயக்கார
பெருந்தோட்டத்தில் பண்டைய கால பிரபுத்துவ முறை இன்னும் வழகிலுள்ளமை மனவேதனை அளிக்கின்றது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் விநியோக சேவை தனித்தனியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார். கெயார் சர்வதேசம், இலங்கை மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த, ‘இலங்கை பெருந்தோட்ட சமூகத்தினரின் சேவை வழங்குதலை இலகுவாக்கல்’ தொடர்பான விளைவுகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை பகிரும் நிகழ்வு கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்து பகிர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், Read more