அமரர் தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்-

mahesபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான தோழர் மகேஸ் கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் இல்லத்தில் இன்று (11.11.2014)மதியம் 1மணியளவில் நடைபெறவுள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்