தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’: சொல்ஹெய்ம் (BBC)
இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நோர்வேயின் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2006-ம் ஆண்டு ஏப்ரலுடன் முறிவடைந்தது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த நிலையில் 2009-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் உச்சத்தில், 2010-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தவணைக்காக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ, இப்போது மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துவருகின்றன. வடக்கு பிராந்தியத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியில், வட மேல் மாகாணத்தில் குருநாகல் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோதே மகிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் மீதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். Read more
இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகம். அத்துடன், தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும் விபரங்களும் விசாரணைகளில் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும். ‘பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சாட்சியங்களின் ஊடாக கொலைக்கான காரணம் பற்றிய தகவல்களை விசாரணைகள் முடிவடைந்ததும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும். அந்தப் பகுதியின் பிரதேச செயலாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும். இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையையும் பாராமல் நாங்கள் கைது செய்வோம் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக 5 இந்திய மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன.