இலங்கை – இந்தியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்-
 இந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என டெல்லியில் இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்றுமாலை டெல்லி சென்றார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக் கொண்டார். பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேன தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்தியாவுக்கும் – இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னே எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது. இந்தப் பயணத்தின்மூலம் இந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்” என்றார். முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா – இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது. இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக எதிர்வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா – இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும். விரைவில், இந்தியா – இலங்கை வர்த்தக செயலர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம்” என்றார். இதேவேளை, நாளை 17ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடவுள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
அதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 
  திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.