Header image alt text

வவுனியா தாண்டிகுளம் பிரமண்டு மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2015

IMG_2869வவுனியா தாண்டிகுளம் பிரமண்டு மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று (12.02.2015) அதிபர் திருமதி.மஞ்சுளா திருவருள்நேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கோட்ட கல்வி அதிகாரி திரு. நடாராஜா அவர்களும் சிறப்பு  விருந்தினராக  வவுனியா தெற்கு வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர் அவர்களும் கௌரவ விருந்தினராக  புளொட் தலைவரும்; வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்தன்  அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில்; திரு.தர்மலிங்கம் சித்தார்தன்  அவர்கள் பங்குபற்ற முடியாத காரணத்தினால் பதிலாக புளொடின் மத்திய குழு உறுப்பினரும் வன்னி பிராந்திய அமைப்பாளருமான திரு.க.சிவநேசன் (பவன்) அவர்களும் புளொட் இன் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னால் உப நகர பிதாவும் திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் விசேட அதிதியாக திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களும் திரு.பரமாநந்தன் செழியன், திரு.அன்டன் பொன்னையா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் இறுதி அம்சமாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்குரிய அனைத்து செலவுகளும் இலண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பினை சேர்ந்த திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பொறுப்பேற்றிருந்தார்.                         Photos⇓ Read more

காங்கேசன்துறை துறை முகத்தை புனரமைக்கவுள்ளதாக அறிவிப்பு

kankesanthuraiகாங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த அமைச்சர், துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பாதுகாப்பு தேவைகளுக்கு தவிர ஏனைய காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை கடற்படையிடம் இருந்து பெற்று, வர்த்தக நோக்குக்காக அதனை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும். துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

பெண்களும் பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.

poardamஇலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலும் தாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Read more

ஜனாதிபதி – வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

vikgi maithriதமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திரதின வைபவத்தில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும். Read more

யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விடுவிப்பு

IMG_4137யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், Read more

இனப்படுகொலை என வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம். குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரிப்பு

fig-17இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை, இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார்.
அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்ற வகையில் காரணங்கள் கூறப்பட்டிருந்தது. அதனையொட்டி கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று அந்தப் பிரேரரணை சமர்ப்பிக்கப்படாமலே இருந்துவந்தது. Read more

முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம்

Muhamalaiகிளிநொச்சி, முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,220பேர்  பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் இதுவரை மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்;படாத பகுதிகளில் ஒன்றான முகமாலையில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முகமாலையை சேர்ந்த 103 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் இத்தாவில் பகுதியை சேர்ந்த 10 குடும்பங்;களைச் சேர்ந்த 39 பேரும் வேம்பொடுகேணி பகுதியை 130 குடும்பங்;;களைச் சேர்ந்த 842 பேருமே இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர் என அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் முகமாலையில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட போதும், வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையால் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’  விழிப்புணர்வு போராட்ட அழைப்பு

waterயாழில் தற்பொழுது நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு போராட்டம் ஒன்று சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15, 02, 2015. காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு 06, வெள்ளவத்தையில் (கொமர்சியல் வங்கிக்கு அருகில்) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள அழைப்பு,
யாழ். குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது.
நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.
அதுபோல, எண்ணெய் கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும் துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.
இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.
இன்று யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கெனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.
„சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்’

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு செயலகம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவால் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநேதராகலிங்கம், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 
1990ஆம் ஆண்டு புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக முல்லைத்தீவு நகரின் சகல கட்டுமானங்களும் அழிவடைந்தன. இதனால் நகரத்தை விட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். பின்பு 1996ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்த மக்கள், 2004ஆம் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பாதிப்புக்குள்ளாகினார். இதன்போது 3000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

2008ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோதும் முல்லைத்தீவு நகரம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.  2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், முல்லைத்தீவு நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடப் பணிகள் 220 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் இரு பிரதேச சபைகளுக்கு தேர்தல்

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை முதல் வாக்காளர் அடடைகள் விநியோகிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரா சசீலன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘கடந்த 2012ஆம் குறித்த இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததுடன், அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட போது நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது. எனினும் குறித்த இரு பிரதேச சபைகளுக்கும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இம்மாதம் 28ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 90 வேட்பாளர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 72 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். இதேவேளை, கரைத்துறைப்பற்றில் 23,559 பேரும், புதுக்குடியிருப்பில் 29,279 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை வியாழக்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

 

சித்தன்கேணி மாதர் சங்க பொன் விழா 

ponvizha1 ponvizha2 ponvizha3 ponvizha4 ponvizha5 ponvizha6சித்தன்கேணி மாதர் சங்க மண்டபத்தில் சங்க தலைவர் திருமதி அஜித்தா சிவகரன் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழவில் பிரதம் விருநதினராக சங்கானைப் பிரதேச செயலர் திரு.அ.சோதிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினரக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.ஆ.கோகுலன், கிராம சேவை அலுவலர் திரு.ந.சர்வேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாதர்சங்க மூத்த உறுப்பினர் திருமதி. மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களும் சங்கானை பிரதேச செயலர் காசிநாதன் நிரூபா அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
இவ் நிகழ்வில் சங்கத் தலைவர் திருமதி அஜித்தா சிவகுமார் அவர்கள் உரையாற்றுகையில் இன்று பொன் விழா காணும் இவ் மாதர்சங்கத்தின் தலைவியாக பதவி வகிப்பதை இடடு மகிழ்வடைகின்றேன். முன் ஒரு காலம் பெண்கள் வாழ்ந்த நிலை இன்று பாரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ் நிலையில் நாம் அனைவரும் இணைந்து பெண்களை வலுவூட்ட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது. இதன் அங்கமாக எமது மாதர்சங்க எல்லைக்கு உட்பட்ட பெண்கள்; இன்று பல நிலைகளிலும் இடம் பிடித்துள்ளனர். எமது பிரதேச சபைத் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது நிலை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும் Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் யாழ் இந்துக் கல்லூரியில்  மாபெரும் இரத்ததானம்..!

IMG_6207blutயாழ்இந்துக்கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் யாழ் இணைப்பாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததானம் நேற்றுமுன்தினம் 08.02.2015 காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை நடைபெற்றது. இவ் இரத்ததானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான  புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின்  முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், அமைப்பாளர் லி.கஜன், கல்வி அபிவிருத்தி பிரிவின் திரு ம.பிரதீஷ் , ஊடக இணைப்பாளர் திரு சஞ்சீவன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு எஸ்.சுரேந்தர், முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு வி.சஜீவ்நாத், யாழ் மாவட்ட இணைப்பாளர்களான திரு தனுஷ், திரு சிவா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் என  பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இரத்ததானம் வழங்கியவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வழங்கப்பட்டதுடன், யாழ் நகர் எங்கும் இரத்ததான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் அனுசரணையில்  இரத்ததான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட கோவில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு இன்று தமிழ் தேசிய இளைஞர் கழகமாக இலங்கையின் பல பாகங்களில் தமது சமூக, கலை,  கலாசார,  கல்வி அபிவிருத்திகளில் ஈடுபடும் இக்கழகம் யாழ் மண்ணில் தானங்களில் சிறந்த தானமான இரத்ததானம் மூலம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_6187 IMG_6241 IMG_6243 IMG_6245 IMG_6249 IMG_6253 IMG_6254 IMG_6262 IMG_6324 IMG_6326 IMG_6336 IMG_6337 IMG_6348 IMG_6357 IMG_6366 IMG_6370 IMG_6403 IMG_6405 IMG_6415 IMG_6419 IMG_6420 IMG_6425 IMG_6426

அதி திறமை சித்திபெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் பாராட்டி ஊக்குவிப்பு-

meesalai veerasingam school 09.02.2015 (1)meesalai veerasingam school 09.02.2015 (2)meesalai veerasingam school 09.02.2015 (4)meesalai veerasingam school 09.02.2015 (3)யாழ்ப்பாணம் மீசாலை, வீரசிங்கம் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற ஆர்.தனுஜன் என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் அதிதிறமை (3யு) சித்திபெற்று நேரடியாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

 புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாணவர் தனுஜனுடைய திறமையை மெச்சி அவரைப் பாராட்டி வாழ்த்தி இன்று (09.01.2015) வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அவருக்கு ஊக்குவிப்பு அன்பளிப்பை வழங்கியுள்ளார். Read more