Header image alt text

அமரர் சபாரத்தினம் கணநாத் அவர்களின் நினைவாக இரத்ததான முகாம்-

bloodஅமரர் சபாரத்தினம் கணநாத் அவர்களின் நினைவாக வடலியடைப்பு இளைஞர் கழகம் மற்றும் வடலியடைப்பு சனசமூக நிலையம் இணைந்து கடந்த 10.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாமினை நடாத்தியிருந்தனர். இவ் உயிர் காக்கும் உத்தம பணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.  படங்கள் இணைப்பு Read more

நேபாள நிலநடுக்கத்தில் இலங்கை தூதரகத்திற்கு சேதம்-

nepalநேபாளத்தில் இன்றுபகல் 12.40அளவில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே அகற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 25ம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று நேபாளத்தின் மேற்கு பகுதி சீனாவின் எல்லையில் நிலத்துக்கு அடியில் 18.5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்க காலமானார்-

niranjan ministerசட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்க சுகயீனம் காரணமாக காலமானார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நிரஞ்சன் விக்ரமசிங்க மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார். 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளுமன்றுக்குத் தெரியான நிரஞ்சன் விக்ரமசிங்க கடந்த மாதம் 23ம் திகதி சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக பதவியேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. காலமடைந்த பிரதியமைச்சர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் – யானை மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயம்-

accident elephantதம்புள்ளை – ஹபரன பிரதான வீதியில் மீகஸ்வௌ பிரதேசத்தில் இன்று அதிகாலை பஸ் ஒன்று யானைமீது மோதியதில் இடம்பெற்ற விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பயணிகள் காயமடைந்து ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கும் இருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஹபரன – ஹிரிவடுன பகுதியில் அதிகாலை 2மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது காயமடைந்த யானை காட்டுக்குள் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்சில் பயணித்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தியவதன நிலமேயிடம் விசாரணை, கோட்டாபய பிறிதொரு திகதி கோரல்-

diyavadanaகண்டி தலாதா மாளிகையின் தியவதன நிலமேயான பிரதீப் நிலங்க தெல பண்டாரவிடம் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலதா மாளிகையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவுக்கு தன்னால் இன்று சமூகமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக மற்றுமொரு தினத்தை ஒதுக்கி தருமாறும் கோரியுள்ளார்.

நேபாளத்திலிருந்து இலங்கை இராணுவக்குழு நாடு திரும்பியது-

nepal................நேபாள நில அதிர்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் சென்ற இலங்கை இராணுவத்தினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர். அங்கு சென்ற 142 ராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் மருந்;து ஆகியனவற்றுடன் சுமார் 17 தொன் எடைகொண்ட பொருட்களை ஏற்றிய வானுர்தி ஒன்று நேற்று காட்மண்டுவுக்கு சென்றது. இந்நிலையில், அந்த வானூர்தியிலேயே இலங்கை படையினர் நாடு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவுசர் பௌசி பிணையில் செல்ல அனுமதி-

fausi sonஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பௌசி, கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார். நவுசர் பௌசியை கைதுசெய்து நீதிமன்றில் முன்னி;லைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, கொழும்பு குற்றவிசாரணை பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பிரதேச காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நேற்று உத்தரவிட்டிருந்தார். 2011இல் கொழும்பு டொரிங்டன் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாகவே அவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. நவுசர் பௌசி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் புதல்வராவார். ஐகதான நவுசர் பௌசி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவருக்கு 10ஆயிரம் ரூபா ரொக்க பிணையும், 10 லட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 1ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

இலங்கைக்கு தாதி பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை-
maiththiriஇலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைதினம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது தாதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை-

jeyalalithaதமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பான 100 கோடி ரூபாய் அபராதம், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகிவற்றை நீதிபதி குமாரசாமி இரத்து செய்து இன்றுகாலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சுமார் 3 நிமிடங்கள் மாத்திரமே வாசித்த நீதிபதி குமாரசாமி, அங்கிருந்து எழுந்து சென்றார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின் போயஸ் கார்டனில் குழுமியிருந்த ஜெயலலிதா ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியு;ளளனர். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் மற்றும் பெங்களுர் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, போயஸ் கார்டன் முன்னிலையில் அதிக பொதுமக்கள் கூடியுள்ளதையடுத்து அங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களின் பிறந்ததின விசேட நிகழ்வு-

kumaraguruparanஜனநாயக மக்கள் காங்கிரஸ், கூட்டு முன்னணி தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களின் 57ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் இன்றுகாலை 10.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த விசேட நிகழ்வின் பிரதம விருந்தினராக நாகராஜக் குருக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், புளொட் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலர் சுரேஸ் கெங்காதரன், தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு நிர்வாக செயலாளர் மொகமட் பௌமி, ஜனநாயக தேசிய முன்னணியின் உப தலைவர் முல்லை ரகுநாதன், கொழும்புத் தமிழ்ச் சங்க பிரமுகர் பி.எம். கந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மஹிந்தவிடம் நட்டஈடு கோரி நிதியமைச்சர் வழக்கு-

raviமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை நித்திரை விட்டு தெளிவான நிலையில் கருத்து வெளியிடுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் ரவி கருணாநாயக்க கேட்டுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷமீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணியிடம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி நிறைந்த அபிவிருத்தி திட்டங்கள் சிலவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரர் நாடு திரும்பும்போது கைதுசெய்ய உத்தரவு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றில் ஆஜராகாதிருந்த குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள தேரர் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் ஞானசார தேரர் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு கோட்டாபய மனு தாக்கல்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவின்மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சஜீன் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்-

sachin vassநாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இன்று அவரை கைது செய்திருந்தனர். இதையடுத்து அவரை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோது அவரை எதிர்வும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலக வாகன முறைகேடுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் உள்ளிட்ட மூவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-

ranil01பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து பாராளுமன்றத்தை கலைக்க அழுத்தம் கொடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். பிரதமராகி 40 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ரணில் விக்ரமசிங்க நடத்தும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவென மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் குணரத்ன கூறியுள்ளார். நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டே மேயர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பிணை-

rtrrrகோட்டே மேயர் ஜானக்க ரணவக்க, எதிர்க்கட்சி தலைவர் யுகத் அப்புஹாமி ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கைகலப்பையடுத்து இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவ்விருவரையும் தலா 10, ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவித்துள்ளார். தனியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திகொண்டிருந்த போது கோட்டே மேயர் ஜானக்க ரணவக்க தன்மீது தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் யுகத் அப்புஹாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, எதிர்க்கட்சி தலைவரே அச்சந்தர்ப்பத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியதாக மேயர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தந்தை செல்வா தினத்தில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் கௌரவிப்பு-

fgffffதந்தை செல்வா நற்பணி மன்றத்தின் கொழும்பு கிளை கொழும்பு விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் தந்தை செல்வாவின் தினத்தினை கடந்த 26.04.2015 அன்று நிகழ்த்தியது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும், சிறப்பு விருந்ததினராக மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கனேசன் அவர்களும், கௌரவ விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் அவர்களது சேவையைப் பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை தந்தை செல்வா விருதும் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வேலணை வேணியன், கணித ஆசான் தளையரட்ணம், சண் குகவரதன் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா கௌரவிப்பு- (படங்கள் இணைப்பு)

rtrrtttதமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குமான ஆசன பங்கீட்டில் புதிய சுழற்சிமுறை மாகாண சபை உறுப்பினரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் திரு எம்.பி.நடராஜா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (10.05.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மாவை சேனாதிராஜா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு சி.பாஸ்கரா அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். இந்திய பிரதித் தூதர் கௌரவ எஸ்.டி.மூர்த்தி அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர். விசேட விருந்தினர்களான முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வை.பாலச்சந்திரன், வட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், ரவிகரன், சிவமோகன், தியாகராஜா, இந்திரராஜா, க.சிவநேசன்(பவன்), ஜி.ரி லிங்கநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் க.சிவலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் சேனாதிராஜா வவுனியா தெற்கு கல்விவலய பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

கொழும்பு நோக்கி வந்த விமானம் திரும்பிச் சென்றது-

malaysian flightநேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை வந்தடைந்ததாக தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்-

universityபல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகளை பெற்றுள்ள மாணவர்கள் நாளைய தினம் முதல் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கைநூல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விண்ணப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்முறை 24,000ற்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கு எண்ணியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு-

maithribalaஅகில இலங்கை கம்பன் கழக கம்பன் விழா 2015ற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்திருக்கின்றார் இந்நாட்டில் இன சௌஜன்யம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இது அமைந்திருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொழும்பின் தமிழ் சமூக பிரதிநிதிகள் இராமகிருஷ்ண மண்டப வாயிலில் இதய சுத்தியோடு வரவேற்றனர். டாக்டர் ரத்னகுமார், புரவலர் ஹாசிம் ஓமர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கலை இலக்கிய காவலர் தே.ஈசுவரன், மாலா சபாரத்தினம், தலைநகர் தமிழர் அரசியற் பிரதிநிதி கலாநிதி குமரகுருபரன், தலைநகர் தொழில் அதிபர் ஸ்ரீதரசிங் ஆஸ்திரேலிய பிரமுகர்கள் குமாரதாசன், திரு நந்தகுமார் ஆகியோர் இந்த வரவேற்பில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறை மாற்றம் குறித்து விஷேட கலந்துரையாடல்-

meetingபுதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. பரிந்துரைக்கப்படும் புதிய தேர்தல் முறை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதே இச் சந்திப்பின் நோக்கமாகும். இதேவேளை இன்றுமாலை சில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் 22குடும்பங்கள் இடம்பெயர்வு-

rainகடும் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 22குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மின்னல் தாக்கம் காரணமாக இவ்வருடம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதென நிலையம் அறிவித்துள்ளது.

கலாநிதி குமரகுருபரன் அவர்களுக்கு வாழ்த்து-

kumaraguruparanஜனநாயக மக்கள் காங்கிரஸ், கூட்டு முன்னணி தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் இன்று அகவை ஐம்பத்து ஏழினை நிறைவு செய்து 58இல் காலடி வைக்கின்றார். முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினராக கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை சமூகத்துடனும் பல்வேறு தோட்டங்களில் வாழும் மக்களுக்கும் பணியாற்றியவர். அதற்கு முன்னரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக மக்களால் தெரிவாகி சேவையாற்றியவர் . தேசிய அரசியலிலும் பெரும் பங்குபெறுபவர். ஜனாதிபதி பிரேமதாச காலத்தின் சர்வ கட்சி மாநாட்டு கூட்டங்களில் மூத்த சட்டத்தரணிகள் மோதிலால் நேரு ,விநாயக மூர்த்தி ஆகியோருடன் பங்குபற்றியவர். பின்னரும் ஜ.ம.மு பிரதிநிதயாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் முழுக்காலமும் தொடர்ந்து பங்கு பற்றியவர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன் அதில் கைச்சாத்திட்ட நால்வரில் ஒருவர். இன்றும் தமிழ் தேசிய நலம்சார்ந்த செயட்பாட்டாளராக விளங்குகின்றார். ஆதலின் தமிழ் தேசிய பணிக்குழுவின் ஆரம்பகால உறுப்பினர். தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர்களில் ஒருவர். ஜனாதிபதி பொது வேட்பாளர், ஆட்சிமாற்ற தேர்தல் செயற்பாடுகளில் பங்கு பற்றியவர். என தனது வாழ்த்து செய்தியில் ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் ஐயாசாமி இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, திருவையாறு முன்மாதிரி கல்வி நிலையத்திற்கு நிதியுதவி-

ffgfgffதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் கீழ், கற்றலுடன் களநிலைக் கல்வியும் மாணவ வாழ்வியலில் அத்தியாவசியம் என்பதனை கருத்தில் கொண்டு திருவையாறு இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து புளொட் தலைவரும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய நேற்று (08.05.2015) கள நிலைக் கல்விக்கான ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் இளைஞர் கழக ஸ்தாபகரும், புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட்டின் கிளிநொச்சி கிளை முக்கியஸ்தர் திரு வே. சிவபாலசுப்ரமணியம், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு சோ.சுரேந்தர், கழகத்தின் பொருளாளர் திரு.த.நிகேதன், கழக சிரேஷ்ட உறுப்பினர் திரு.எஸ்.சுரேஷ்குமார் ஆகியோருடன் திருவையாறு இளைஞர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

விழிநீர் அஞ்சலிகள் – அமரர் முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள்

premawathyயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பெரியமணல், காரைநகரை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது சிரேஸ்ட உறுப்பினர் குமரேசன் மோகனதாசன் (காந்தன் – சுவிஸ்) அவர்களின் மூத்த சகோதரியுமான முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள் நேற்று (08-05-2015) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியினை சமர்ப்பிக்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் அவரது காரைநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்களுக்கு கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 

0041 787443082 (சுவிஸ்), 0094 766262580 (இலங்கை) 

தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு கால அவகாசம் கோரல்-

manoதேர்தல் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. நேற்று இந்த கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தினால் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறான தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அது குறித்து ஆராய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட காலமேனும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கூறியுள்ளார். இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி. உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிப்பது குறித்து சந்திரிக்காவுடன் பேச்சு-

tna (4)யாழ்ப்பாணத்தில் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவித்துக் கொள்வதற்காக மீள்குடியேற்றத்துறை அமைச்சுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்கவுள்ளது. வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நேற்றைதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள இராணுவ தடைகளை நீக்கவும், இன்னும் விடுவிக்கப்படாதுள்ள பிரதேசங்களை விடுவித்துக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrestபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலையில் திருமணம் முடித்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையில் தலைமறைவாகி வசித்து வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு பா.ஜ.க வலியுறுத்தல்-

bjp13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வை வழங்கி, தமிழ் பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தை தோற்றுவிக்குமாறு பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய இல.கணேசன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே சம உரிமைகளை வழங்க முடியும் என்று, இல. கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் சந்தித்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட தரப்பினரை வலியுறுத்தியதாகவும் அவர் தமது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டாரில் இலங்கையர் குடியிருப்பில் தீப்பரவல்-

qatarகட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் தீப் பரவல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது. இவர்கள் தற்போது முகாம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து ஆராய கட்டாருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்-

john amaratungaஅனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் இம் மாதம் 15ம் திகதியளவில் கலைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க தெரிவித்துள்ளார். இவற்றின் கால எல்லை மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், நாட்டில் புதிதாக ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக அவற்றின் கால எல்லை நீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் அதேவேளை, இங்கு இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு விஷேட குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் படுகாயம்-

accidentவெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடைய சிறிதரன் மற்றும் 24 வயதுடைய டிலக்சன் ஆகியோர் வெளிநாட்டில் பணிபுரிவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துள்ளனர். கொழும்பு சுதந்ததாஸ விளையாட்டுக்கு அரங்குக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸின் பின்புறமாக இருந்த தமது பொதிகளை எடுத்துகொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனமொன்று குறித்த நபர்கள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் னுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் மகஜர் கையளிப்பு-

nagaranjiniவடக்கு மாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவிடம் தமது தொழில் நிலைமைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக வழங்கியுள்ளனர். அவ் மகஜரில் உள்ளடக்கப்பட்ட விடயமானது 2005ம்ஆண்டு பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் நிவாரணம், புனர்வாழ்வளிப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின்கீழ் அபிவிருத்தி உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு பல்வேறு அமைச்சு மாறுதல்களின் மூலம் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பொருளாதார அமைச்சு என மாறுதல்கள் பெற்று தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின்கீழ் (கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் பிரிவுக்கு) உள்வாக்கப்பட்டுள்ளோம். தங்கிளின் ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட நாம் இன்று 10வருட அரச சேவையினை பூர்த்தி செய்யும் நிலையில் எமது பதவியில் எவ்வித மாற்றமும் முன்னேற்றங்களும் இன்றி தொடர்ந்தும் அபிவிருத்தி உதவியாளர்கள் என்ற நிலையிலே கடமையாற்றி வருகின்றோம். தற்போது 2013ம் ஆண்டு பட்டதாரிகளை அரச சேவைக்கு நியமனம் செய்யும்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற நிலையில் சேவைப்பிரமாணக் குறிப்புக்களுடன் நியமனம்செய்யப்பட்டு இருப்பதனால் எமது சேவை நிலையங்களில் நாம் பலதரப்பட்ட இன்னல்களை பாதிப்புக்களை சந்தித்து வருவதனால் எமது பதவிநிலை தொடர்பான காத்திரமான நடவடிக்கை எடுத்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையர் ரணில் வெற்றி-

ranilபிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் டேவிட் கெமரூன் தான் போட்டியிட்ட விட்னி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். வெளியிடப்பட்ட தேர்தல் முடிவின்படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன.இதுவரை வெளியாகியுள்ள 331முடிவுகளில், 136 இடங்களை தொழிற்கட்சியும், 119இடங்களை கொன்சர்வேட்டிவ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதேவேளை, ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட, மற்றொரு இலங்கையரான, ரணில் ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்துள்ளன. இதனிடையே, ரூசிலிப், நேர்த் வூட், மற்றும் பின்னர் தொகுதியில், தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் தொல்வியடைந்தார். இந்த தொகுதியை 30,520 வாக்குகளுடன் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கைப்பற்றிய நிலையில், 166 வாக்குகளை மட்டும் பெற்று சொக்கலிங்கம் யோகலிங்கம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.

சம்பூர் கடற்படை முகாம் நீக்கம்-

sampoorதிருகோணமலை, மூதூர், சம்பூரில் உள்ள கடற்படையின் பயிற்சி முகாம் வேறொரு இடத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அஸ்ட்ரின் பெர்ணாண்டோ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். இதன்படி இந்த முகாம் அமைந்துள்ள 237ஏக்கர் காணி, அதன் உண்மையான உரிமையாளர்களுக்கே வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இந்த முகாமை அகற்றுவதால், பாதுகாப்பு பிரச்சினைகள் எவையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சம்பூர் காணியில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய நிலையம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற அதிகாரசபையின் திருமலை மாவட்ட பணிப்பாளர் இந்துராணி தர்மராஜா இதனைக் கூறியுள்ளார்.

வடமராட்சியில் பொலிஸார்மீது தாக்குதல்-

police ...யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது மணலை அகழ பயன்படுத்தும் கருவிகளால் பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் மணல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய இலங்கை உடன்படிக்கைகள்-

russian sri lankaரஷ்யாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பலதரப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் அலக்சாண்டர் ஏ கர்சாவா இதனைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார். இதன்பின்னர் இந்த கருத்தைக் அவர் கூறியுள்ளார். இரண்டு நாடுகளினதும் வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவுள்ளதாகவும், அத்துடன் இலங்கைக்கு ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு சம்பந்தமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகவிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கம்-

sl armyஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் திகதியிலிருந்த இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமையவே இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சேவையாற்றிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர்;. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் 1,200 இராணுவத்தினர் இணைக்கப்பட்டிருந்தனர். இப்பிரிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்டது. மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவானபின் அவரின் பாதுகாப்புக்காக இருந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு 3,000ற்கும் மேற்பட்டவர்களை இணைந்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மேயர் கைது-

kotte mayorஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மேயர் ஜனக்க ரணவக்கவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுகத் அப்புஹாமி மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நகரசபைத் தலைவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுகத் அப்புஹாமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மே.29வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்-

university2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு 2014, 2015ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய இக்கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் நாடளாவிய ரீதியில் விநியோக முகவர்களின் புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல.20, வாட் பிளேஸ், கொழும்பு-07 என்ற முகவரியிட்டு மே மாதம் 29ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்தபாலில் மட்டும் அனுப்பி வைக்கப்படவேண்டும் என பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஐ.நா அமர்வுக்கு முன் உள்நாட்டு பொறிமுறை:மங்கள-

mangalaஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டு அரசியலில் தற்போது கட்சிகளுக்கிடையிலான போட்டி காணப்படவில்லை. மாறாக நல்லாட்சி மற்றும் கொள்ளை ஆட்சிகளுக்கு இடையிலான போட்டியே நிலவுகின்றது என கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய அமைச்சர் மங்கள, புரட்சிக்கு எதிரான எதிர் புரட்சியொன்று தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்டு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் பொதுச் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்’ அத்துடன், ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும்’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேயரை பதவி விலக்கும் அறிவித்தல் செல்லுபடியானது-

mayorகாலி மாநகர மேயர் மெத்சிறி சில்வாவை பதவி விலக்கி தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா விடுத்த வர்த்தமானி அறிவித்தல் அதிகாரமுடையது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தென் மாகாண முதலமைச்சரின் வர்த்தமானி அறித்தலை தற்காலிகமாக தடை செய்து தென் மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக தென் மாகாண முதலமைச்சர் செய்த மேன்முறையீடு இன்று (விசாரணைக்கு வந்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது. மாகாண சபையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி காலி மாநகர மேயர் மெத்சிறி சில்வா மீதான மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு அவரை பதவி விலக்கியதாக சான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன்(பவன்) தமிழரசுக் கட்சித் தலைவர் சந்திப்பு-

K.Sivanesan taking oaths 06.05.2015 (1)வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக வட மாகாணசபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு கந்தையா சிவனேசன் (பவன்) அவர்கள் சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (06.05.2015) இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் க.சிவனேசன்(பவன்) அவர்கள் உரிய பதில்களை வழங்கினார். அத்துடன் பிறிதொரு கேள்விக்குப் பதிலளித்த க.சிவனேசன் அவர்கள், எங்களுடைய முல்லைத்தீவு பிரதேசம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது. அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். அதற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். மாகாண சபைக்கூடாக என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் அந்த மக்களுக்கு ஆற்றுவேன் என்று தெரிவித்தார்.

பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு மூடப்படாது, பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட மாட்டார்-

rajithaபிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற மைத்திரி – மஹிந்த சந்திப்பில் 5 அம்சங்கள் இருந்ததாகவும் அதில் பிரதமர் வேட்பாளர் விடயமும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவை மூடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்கவில்லை. ஆனால் அதில் அரசியல் தலையீடின்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஊழல், மோசடி செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது என்ற தேர்தல் வாக்குறுதி மாறாது. பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணைகளை மாத்திரமே மேற்கொள்ளும். ஆனால் நீதிமன்றமே தண்டனையை தீர்மானிக்கும். வேட்புமனு விடயம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தல் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை கட்சிகள் பாதிக்கக்கூடாது-

mangala20வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதுவே ஐ.தே.கவின் நிலைப்பாடு. ஆனால் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் இவ்வாறு திருத்தப்பட்டு அமுலாக்கப்படுகின்ற புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தினால், சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது. மேலும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, உடனடியாக இந்த மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் மங்கள் சமரவீர கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையர்கள் போட்டி-

british candidatesஇன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 4பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இரு தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமாலி பெர்னாண்டோ, ரணில் ஜயவர்தன, உமா குமரன், சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர். உமா குமரன் பிரித்தானிய வானொலி நிலையம் ஒன்றில் அறிவிப்பாளராகவும் சமாலி பெர்னாண்டோ சட்டத்தரணியாகவும் கடமையாற்றுகின்றனர். சொக்கலிங்கம் யோகலிங்கம் பிரித்தானிய லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். மேலும் இவர் இலங்கையில் பிறந்தவர். ரணில் ஜயவர்தன பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் கல்வி பயின்றிருப்பதோடு பிரித்தானியாவின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் பிரித்தானியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை மீளப்பெறுமாறு தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை-

kachchativeகச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர். இதற்காக இலங்கை அரசுடன், இந்திய மத்திய அரசு கலந்துரையாடி கச்சதீவை மீளப்பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் எம்.பிக்களே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை அரசியல் சாசன அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இது இந்தியாவின் நன்மைக்காகவும் வழங்கப்படவில்லை. எனவே, கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சட்டவிரோதமானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரியின்கீழ் மகிந்த பிரதமராக வேண்டும்-வாசு-

vasuஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ், மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளை குருணாகலையில் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், அவருடன் இணைந்த சுதந்திர கட்சியின் தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைத்திரிபால மற்றும் மஹிந்த ராஜபக்ச இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கட்சி பற்றி முக்கிய விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசிலின் விளக்கமறியல் நீடிப்பு, முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பிரதானியிடம் விசாரணை-

basilதிவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்றுமுற்பகல் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி இன்றுமுற்பகல் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கிடம் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் இன்று வெளியீடு-

universityபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய மாணவர் கையேடு இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இம்முறை சில புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர், அந்த கையேட்டினை மாணவர்கள் முழுமையாக வாசித்து, தெளிவுபெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் கையேட்டில் அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.

விருப்பத்துக்கு மாறாக குடியேற்றப்பட மாட்டார்கள்-ஆஸி-

australiaகம்போடியாவில் குடியேற விரும்புகின்ற அகதிகள் மாத்திரமே அங்கு குடியேற்றப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்ரன் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்றிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அகதிகளை கம்போடியாவில் குடியேற்றம் வேலைத்திட்டத்தை 40 மில்லியன் டொலர்கள் செலவில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கு கம்போடியா இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற அகதிகள் மாத்திரமே அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.