Header image alt text

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்.

yazl_vithya_02யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த ஆரப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளில், மற்றும் யாழ்.நகரப்பகுதியில் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள வீதிக்கு இறங்கி தொடர் ஆர்ப்பாட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குடாநாட்டின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கண்டன ஊர்வலம்.- வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக கொரப்பத்தான வீதியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கொரப்பத்தான் வீதியூடாக ஊர்வலமாக பாடசாலையை சென்றடைந்திருந்தனர்
pundudu_manaviசந்தேகநபர்கள் மீது தாக்குதல்:- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அழைத்து சென்றபோது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தாக்கியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க Read more

மே 18 இல் த.தே.கூ தலைவர் அறிக்கைகள்

Sampanthan (3)இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாளாகும் – போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் – இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவு கூரும் நாளாகும்.   இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் இரா சம்பந்தன் கூற்று   

இலங்கையின் சரித்திரத்தில் போர் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டும். இந்தப் போர் காரணமாக எல்லா இனத்தவர்களும் உயிரிழப்புகளை – துன்ப, துயரங்களை எதிர்நோக்கினர். இது எல்லோருக்கும் படிப்பினையாகும்.
எனினும், இந்தப் போர் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துள்ளது. இதனால் எமது தமிழ் மக்கள் உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர். அவர்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிந்தன.
இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் தீர்வு கண்டிருந்தால் இந்தப் போர் இடம்பெற்றிருக்கமாட்டாது. இந்நாட்டில் மீண்டும் போர் இடம்பெறக்கூடாது என்பதே எமது விருப்பமாகும்.
எனவே, தற்போது ஆட்சியிலுள்ள அரசு தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை உடன் காணவேண்டும். இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழருக்கு தேசிய துக்க நாளாகும்; போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும்; இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும்.
எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக. உயிரிழந்த உறவுகளுக்கு நாம் இவ்வாறு செய்வதன் ஊடாக எமது மனவேதனைகளை ஓரளவு தேற்றிக்கொள்ளலாம்.
அதேவேளை, இன்றைய நாளை தேசிய துக்க நாளாக நாம் அனுஸ்டிப்பதன் மூலம் போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும். 

மே 18 இல் வடக்கு முதலமைச்சர் அறிக்கைகள்

may 18முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூரும் தினத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை,
கடைசிக் கட்டப் போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவிவந்த இந்த நாளானது யுத்தத்தால் உயிரிழந்த எம் இனிய உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளாகும். Read more

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுகள் (படங்கள் இணைப்பு)

jaffanauni 01முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய நாள் முழுவதும் இந்த நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.
வடக்கின் பிரதமான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நினைவேந்தலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேரணிக்கே நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மக்களை நினைவுகூர தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்து நிகழ்த்துகின்றது. 
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவு நகரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. Read more

புதிய அரசின் நல்லெண்ண சமிக்கைகளை நாம் மதிக்கவேண்டும் – அருட்தந்தை இமானுவேல்

father_sjemmanuelஇலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாகவும்
முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும்.
புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்டும்.
மற்றவர்களின் நல்லெண்ண நடவடிக்கைகளை மதிக்காமல் தொடர்ந்தும் நாங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை நடத்துவதாக அளித்துள்ள உறுதிமொழிக்காக இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
இலங்கை தொடர்பான ஜெனீவா விசாரணை அறிக்கை வரும் செப்டெம்பரில் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், அந்த அறிக்கையை முக்கிய வரலாற்று ஆவணமாகக் கருதி அடுத்தக் கட்டப் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும். அருட்தந்தை எஸ். ஜே.இமானுவேல் பிபிசி தமிழோசையில் கூறியுள்ளார்.
மகிந்த தலமையிலான அரசாங்கக் காலத்தில் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களை தடைசெய்வதாக அறிவித்து இலங்கை பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் அருட்தந்தை இமானுவேல் உள்ளிட்ட உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 
மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது

punkuduthivu_3புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும். அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாகவும். செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் மேலதிக காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் 100 பேர் வரை பலி படகில் நடந்த மோதலில்

indonesiaந்தோனேஷியாவுக்கு அருகே உள்ள கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த படகில் உணவுக்காக நடந்த மோதலில் 100 அகதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தோனேஷிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட பலர் இதுகுறித்து பிபிசியில் கூறியுள்ளதாவது
படகில் நடந்த சண்டையில் சிலர் கத்தியால் குத்தப்பட்டும் சிலர் தூக்கிலப்பட்டும் மற்றவர்கள் கடலில் எறியப்பட்டும் கொல்லபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தையும் மியன்மாரையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான அகதிகள் தாய்லாந்துக்கும் இந்தோனேஷியாவுக்கும் மலேஷியாவுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் மனிதக் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுள்ள நிலையில் தத்தளித்துவருவதாக கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்

jagath_diasஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமையை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மோசமான மனித உரிமை துஷ்பிரயோகங்களுடன் இலங்கை இராணுவத்தின் 57-ம் படையணி தொடர்புபட்டிருந்ததாகவும்.
இதனால் ஜகத் டயஸின் பதவி உயர்வு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தின் 57-ம் படையணிக்கு தளபதியாக இருந்த ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டமை ‘நீதிக்கு கிடைத்த அடி’ என்றும். Read more

வில்பத்து சரணாலய பகுதியில்  பிக்குகள் ஆர்ப்பாட்டம்

vilpattuஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வில்பத்து சரணாலய காட்டுப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அத்துமீறி காடுகளை அழித்து குடியேறியிருக்கின்றார்கள் என்று தென் பகுதியில் பிரசாரத்தைத் தொடர்ந்து சிஹல இராவண பலய உள்ளிட்ட பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகள் குழுவொன்று அந்த சரணாலயத்தின் எல்லைப்புறப் பிரதேசமாகிய மறிச்சுக்கட்டி பகுதிக்கு பேருந்துகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதனால் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பபட்டிருந்தது.
காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றிருந்த பௌத்த பிக்குகள் அந்தப் பகுதியை தமது பிரதேசம் என கோஷமிட்டு உரிமை கோரியதுடன், அங்கு அரச மரக்கன்று ஒன்றையும் நாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில் இந்தப் பகுதியில் சரணாலய காட்டுப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்களையும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் குடியேற்றியிருக்கின்றார்கள் என தென்பகுதியில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றசாட்டையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவில் அரச உயர் மட்டக் குழுவொன்று இந்தப் பகுதிக்கு கடந்த வாரம் விஜயம் செய்து உண்மை நிலைமைகளை விசாரித்து ஆராய்ந்து அறிந்து சென்றிருக்கின்றது.
இதன்போது மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் எந்தவிதமான அத்துமீறல் குடியேற்றங்களும் இங்கு இடம்பெறவில்லை என்றும் இடம்பெயர்ந்திருந்த மக்களே மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூர் காணி தொடர்பான அரசின் அறிவித்தலுக்கு நீதிமன்றம் தடை

sampurஇலங்கையின் கிழக்கே சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தொழிற்சாலையை அமைக்கவிருந்த சிறீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012-ம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக அந்த நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
சம்பூர் மக்கள் சுமார் 9 ஆண்டுகளாக சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் இருக்கின்றனர்
தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமக்கு பெருநட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலை ரத்துசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
குறித்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு வரும் 21-ம் திகதி வரை தடை விதித்துள்ள நீதிமன்றம் அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிக்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்காக திருப்பிக் கொடுப்பதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் அரச அதிகாரி மீது தாக்குதல்

easten uni attackதமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு நாட்டில் தடையேதும் இல்லை என்று புதிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிங்கள மாணவர்களினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரச அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான பத்தக்குட்டி சுமன் தன்மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஓலிக்கப்பட்டதன் காரணமாகவே தன் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். Read more

மே 19 யுத்த வெற்றி தினம், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக பெயர் மாற்றம்

ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில எதிர்ப்பு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்பு

fig-17இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல், முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த மே மாதம் 19 தேதியை யுத்த வெற்றி தினமென்று அறிவித்துக் கொண்டாடி வந்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய அமைச்சர் ராஜித்த சேனரத்ன, இலங்கையில் வாழும் ஒரு சமூகத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு தினத்தை யுத்தவெற்றியென்று கருதுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை மே மாதம் 19ஆம் தேதியை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக கொண்டாடுவதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்தார். Read more

யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலைய மாணவியின் இறுதி ஊர்வலம்

vithiya_3 vithiya_4உயிரிழந்த யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலைய மாணவியின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது அதில் பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள்,  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புங்குடுதீவு பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ள மாணவி சிவயோகநாதன் வித்யாவின் மரணம் தொடர்பில் 3 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மாணவி கொல்லப்படுவதற்கு முன்னர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உறவினர்களும் ஊர் மக்களும் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த மாணவியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, புங்குடுதீவில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. இதில் அரசியல் தலைவர்கள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு புங்குடுதீவில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பை புங்குடுதீவு இளைஞர் கழகம் விடுத்திருந்தது.
வித்யாவின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மாணவிகள் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கிளிநொச்சி யாழ்ப்பாணம் அகிய இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியிருக்கின்றனர்.

விழிப்புலன் அற்றோர் துடுப்பாட்ட நிகழ்வு – யாழில்  (படங்கள் இணைப்பு)

cricket02அண்மையில் யாழ் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி மைதானத்தில் யாழ் மாவட்ட விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் கிழக்கு மாகாண விழிப்புலன் அற்றோhர் சங்கத்திற்கும் இடையே துடுப்பாட்ட நிகழ்வு இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் உதவிப்பணிப்பளர் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.   Read more

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் மரணம் சக மாணவர்கள் போராட்டம் –

untitledmurder_jaffna_007புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவியின் மரணம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் மர்மம் நீடிக்கிறது. இதனை அடுத்து நீதிகோரி சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
காலை மாணவர்கள் ஒன்று திரண்டு வீதிகள் அனைத்தினையும் மூடி போராட்டத்தில் குதித்திருந்தனர். பின்னர் அவர்களிற்கு ஆதவாக பெற்றோர், ஊர்மக்கள் என பலரும் இணைந்து கொண்டு இச்செய்தி அறிக்கையிடப்படும் வரை நீதி வேண்டி போராட்டங்களை முன்னெடுத்தவண்ணம் உள்ளனர். காவல்துறை அப்பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருப்பதுடன் பதற்றம் நீடிக்கின்றது.
நேற்றுப் புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர்..   இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
அவரது இருகால்களும் தடியொன்றில் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவியின் மரணம் கொலையாக இருக்கலாமா என சந்தேகிக்கும் சகமாணவர்கள் மற்றும் ஊரவர்கள் நீதி கோரி போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழு

articleஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய  அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உப-குழு விரிவாக ஆராயும்.
அந்த உப-குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கை, அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவைப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றின் ஆயுட்காலம் அருகில் நெருங்கிகொண்டிருக்கின்றது – பிரதமர் ரணில்

 Ranilநாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த சட்டமூலத்தை புதிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கே எதிர்ப்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டின் கொள்கையாக ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் பயங்கரவாதிகள் பிரச்சினை மட்டுமன்றி வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையை தளமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான சட்டங்கள் அதில் உள்ளடக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார்.

modiசீன அதிபர் ஜி ஷின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்பு முக்கிய அதிகாரிகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். இரு நாட்டு வர்த்தகம் மற்றும் சீன முதலீடு குறித்து பேசினர். அப்போது இந்தியா, சீனா இடையே 20 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து சீன வர்த்தக குழுவினருடன் பிரதமர் சந்தித்து பேசினார். முன்னதாக ஜியானில் உள்ள அருங்காட்சியகம், பிரபல கோயில்கள் சென்று வழிப்பட்டார்.
நடைமுறையை தளர்த்தினார் அதிபர்: சீன அதிபர் எப்போதும் முக்கிய தலைவர்களை பெய்ஜீங்கில் தான் சந்திப்பது வழக்கம். இந்த முறை பிரதமர் மோடியை ஷியானில் சந்தித்துள்ளார். வழக்கமான பாரம்பரியத்தை மாற்றினார் அதிபர்.
20 ஒப்பந்தங்கள்: பயணத்தின் இறுதி முடிவில் இரு நாடுகள் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரயில்வே மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு  பிதிர்க்கடன்கள் நிறைவேற்ற கீரிமலை தீர்த்தத்தில் ஏற்பாடு:-

fig-17வெள்ளமுள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரவும் மற்றும் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் சமயச் சடங்குகளை மேற்கொள்ளும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளும் காரைநகர் மக்களின் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதனையாரும் அரசியல்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர் மக்களுடைய உணர்வுகளை மதித்து அவர்கள் தமது உறவுகளை நினைத்து பிதிர் கடன்களை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலை தீர்த்தக் கரையில் செய்யப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் கீரிமலையில் பிதிர் கடன் நிறைவேற்றுவதற்கும் அதற்கு வேண்டிய பொருட்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. அத்துடன் பிதிர்கடன் கிரியைகளுக்கான  உரிய அந்தணர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

த.வி.புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது – அரசாங்கம்.

ltteயுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், அதற்கு வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு’
விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலா நிகழ்வுகளுக்கு இடமில்லை என பௌத்த சசான மற்றும் சுதேச விவகார அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்காக அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் ஜனநாயக சுதந்திர சூழ்நிலைகளை சில தரப்பினர் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிப்பதாகவும், நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், அதற்கு வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பயங்கரவதம் தலைதூக்கியதாக வெளிக்காட்ட முயற்சிகளை எடுக்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகளை நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டுமாம்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சொல்கிறார்.
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை நினைவுகூரும் வகையில் வடக்கில் எந்தவொரு நிகழ்வும் இடம்பெறக் கூடாது. அதையும் மீறி யாரேனும் நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை ஒற்றுமைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்­பிட்டார் .
முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் தலைவரும் என்ற வகையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்ட காலமாகவே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் எந்த செயற்பாடுகளும் இலங்கையில் சட்ட விரோதமானதே.

நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவு கூர்வதும் சட்ட விரோதமான விடயமேயாகும். இவ்வாறான விடயங்களை தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதுகாப்பை பலப்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் பழிவாங்கல் அரசியலை செய்யாது பாதுகாப்பு விடயத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். முன்னாள் அரசாங்கத்தில் உள்ளவர்களை கைது செய்து பழிதீர்ப்பதை மட்டுமே செய்யாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் அமைப்பினரையும் நபர்களையும் கைது செய்ய வேண்டும்.

அதேபோல் யாரேனும் வடக்கில் புலிகளை நினைவுகூர்ந்தால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் எப்போதும் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு தமது கடமையை செய்யவேண்டும்.

மேலும் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. இவ் விடயம் தொடர்பில் நாம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம் எனவும் தெரிவித்தார்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் அனுஸ்டிப்பு-

ppd_CIமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். அமைதியாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வினை அவதானித்த வீதியால் பயணித்த பொதுமக்கள் பலரும் தாமும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

அன்று காலை தமிழாராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்னதாக அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தை செல்வா சதுக்கப்பகுதியினில் அஞ்சலி நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கை: இறந்தவரை நினைவுகூர உரிமை தேவை

tamil_civil_societyஇலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று (10.05.15) கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் யுத்தத்தில் உயிரழந்த அனைத்து தரப்பினரையும் அச்சமின்றி நினைவுகூரும் உரிமை இல்லாத சூழல் நிலவுவதாக கவலை வெளியிடப்பட்டிருக்கிறது. Read more

கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை-

courts (2)முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கைதுசெய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுமீதான விசாரணை நடைபெறும் வரையிலும் அவரை கைது செய்வதற்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானது எனவும், தன்னை கைது செய்யாமல் இருக்குமாறும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தான் தாக்கல் செய்த அடிப்படை மனுவில் தெரிவித்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ, கடந்த திங்கட்கிழமை இந்த அடிப்படை மனுவினை தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்-

aluvihara........முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலனை செய்யும் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே இன்று அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே தமது முடிவை பிரதம நீதியரசருக்கு அறிவிக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா இன்று கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும்,, நீதியரசர் சரத் டி ஆப்ரூவுடன் இணைந்து மனுவை தாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழாமின் தலைவர் ஈவா வனசுந்தர உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லலித் வீரதுங்கவிடம் விசாரணை-

lalith‘ராடா’ நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை வீடமைப்பு செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்காக 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராடா நிறுவனத்தின் விசேட செயற்றிட்ட அதிகாரி சாலிய விக்கிரமசூரியவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை வி;ளக்கமறியலில் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட புவியதிர்வில் 68 பேர் பலி-

nepal quakeநேபாளத்தில் எவரஸ்ட் சிகரத்திற்கு அண்மையில் நேற்று இடம்பெற்ற திடீர் புவியதிர்வின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அதிர்வின் பாதிப்புகள் காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, இந்தியாவில் நேற்று 17பேர் வரை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, இரு வாரங்களுக்கு முன் நேபாளத்தில் இடம்பெற்ற புவியதிர்வினால் 10ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்;, குழந்தை உயிரிழப்பு-

wellபுத்தளம் மாவட்டம் சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிணற்றினுள் இருந்து காப்பாற்றப்பட்ட தாயும் 7வயது சிறுவனும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு குறித்த தாய் தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார். எவ்வாறாயினும் இதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் இலங்கை விஜயம் இரத்து-

pakistan...பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் ரஹீல் ஷெரிப், இலங்கை விஜயம் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்தே பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் இலங்கை விஜயம் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர், இலங்கைக்கு இன்று மாலை விஜயம் செய்யவிருந்தார்.

மங்களவிடம் மகிந்த 100 கோடி நட்டஈடு கோரல்-

mahinda_rajapakseதனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் 100 கோடி நட்டஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனு அனுப்பி வைத்துள்ளார். மஹிந்த தனது சட்டத்தரணி அத்துல பிரியதர்ஷன டி சில்வாவின் ஊடாக இம் மனுவை அனுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வெளிநாடுகளில் 18பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து இருப்பதாக கொழும்பு ஊடக சந்திப்பொன்றில் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இதன்மூலம் தனது கட்சிக்காரரான மஹிந்தவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மனவேதனை அடைந்துள்ளதாகவும் மஹிந்தவின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் 21ம் திகதிக்கு முன் தனது கட்சிக்காரருக்கு மானநஸ்ட தொகையாக 100கோடியை வழங்குமாறும் அதை செலுத்தாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தரணி அத்துல பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு நிராகரிப்பு-

arjuna mahendranமத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அதன் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக மூன்று நிபுணர்கள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் இன்று இந்த மனுவை நிராகரித்துள்ளனர். இதேவேளை பொலிஸாரின் தற்போதைய நடவடிக்கை குறித்து பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் சட்டவிரோதமான எந்தவொரு செயற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொலிஸ் நிதி மோசடி பிரிவும் முறையான அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மண்மேடு சரிந்து வீழ்ந்து தாயும் குழந்தையும் பலி-

pasaraiபதுளை மாவட்டம் பசறை பிபிலேகம பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வீடொன்றின்மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்துள்ளது. இரவு 8மணியளவில் கற்பாறை வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் மற்றும் கடவுச்சீட்டு நூல்கள் அறிமுக விழா-

fgffffயாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்களது ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் மற்றும் கடவுச் சீட்டு ஆகிய நூல்கள் அறிமுக விழா அண்மையில் இடமபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு தனபாலன், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் திரு. கண்ணதாசன், சின்மயா மிசன் சுவாமிகள் பிரம்மச்சாரி யாக்கிரீட் சைதன்யா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளின்பேரில் சங்கானையில் மிக அண்மையில் திறக்கப்பட்ட நூலகத்தின் பயன்பாடுகளின் பொருட்டு புதிய கணணி ஒன்றினை ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்கள் வழங்கி வைத்தார்.

nool 01nool 00nool 03nool 02