யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் (19.02.2016) வெள்ளிக்கிழமை அதிகாலை அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.Posted by plotenewseditor on 20 February 2016
Posted in செய்திகள்
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் (19.02.2016) வெள்ளிக்கிழமை அதிகாலை அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.Posted by plotenewseditor on 20 February 2016
Posted in செய்திகள்
போரினால் ஏற்பட்ட வடுக்களைச் சீராக்க ஒஸ்திரியாவின் உதவி அவசியம்-ஜனாதிபதி-
போரினால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் சீராக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் சக வாழ்வையும் மேம்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி, ஒத்தாசை மிக அவசியமானதாகும். அந்தவகையில் இலங்கையின் நட்பு நாடான ஒஸ்திரியா எமக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்திரிய ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பிஸ்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்திரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 26 வருட கால போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், வடுக்களையும் மீளமைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உள்நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிகவும் அவசியப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.
காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு-
திருகோணமலை, கும்புறுப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்றுகாலை 10.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி, இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவ்விருவரும் 17ஆம் திகதி வரை வீட்டுக்கு வரவில்லை என துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவரின் சடலமே, இன்று மீட்கப்பட்டதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர், திருகோணமலை – அபயபுரப் பகுதியைச் சேர்ந்த ரோகன நிசாந்த முனவீர (வயது 44) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மீனவர், இறுதியாக நீலநிற மேலங்கி மற்றும் நீலநிற காற்சட்டை அணிந்திருந்ததாக தெரியவருகின்றது. சடலம், தற்போது வைத்திய பரிசோதனைக்காக திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளிப் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய ஏற்பாடு-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான மிரிஜ்ஜவிலை வரண்ட வலய பூங்காவுக்கு சென்று ஞாபகார்த்தமாக மூலிகை மரமொன்றினை நட்டு நினைவுப் புத்தகத்தில் ஒப்பமிட்டார்.
நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்-
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பியகம சுசிம தேரர், பிட்டிகல தம்மவினீத தேரர், மதுவாகல தம்மசிறி தேரர், கிரம தேவிந்த தேரர் ஆகிய நான்கு தேரர்களே எதிர்வரும் மார்ச் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் நேற்றுமாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த மாதம் 26ம் திகதி ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பௌத்த தேரர்கள் சிலர் அவ்விடத்தில் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புகையிரதமும் கொள்கலனும் மோதி விபத்து-
புத்தளம் மாவட்டம் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரிக்கட்டி பிரதேசத்தில் புகையிரதத்துடன் கொள்கலன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரதமும் கொள்கலன் ஒன்றும் இவ்வாறு மோதிக் கொண்டதில் புகையிரதத்திற்கு சேதமேற்பட்டுள்ளது.
விபத்தில் கொள்கலன் குடைசாய்ந்துள்ளதுடன், புகையிரதத்தின் இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளன. இதனால் புகையிரதத்தின் இரு சாரதிகளும், கொள்கலனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால் புத்தளம் நோக்கிய ரயில்சேவைகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தது. இந்நிலையில் தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் இலங்கைப் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தவர் கைது-
இரண்டு இலங்கைப் பெண்களை அடிமைகளாக நடத்தி வந்த இலங்கையர் ஒருவர் தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனிதக் கடத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளும் அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் பெண்களையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றில் மீட்கப்பட்ட இரண்டு இலங்கை பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ் பள்ளத்தில் விழுந்ததில் சாரதி உட்பட 40பேர் காயம்-
தனியார் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, இரத்தினபுரி தம்புருவன- காவத்தை வீதியில் சென்றவேளை, இரத்தினபுரி, தம்பலுவன பகுதியில் வைத்து 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து, இன்றுகாலை 6.15க்கு இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பஸ்ஸின் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த ஆடைத் தொழிற்சாலையின் 40 ஊழியர்களும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Posted by plotenewseditor on 19 February 2016
Posted in செய்திகள்
தமிழில் தேசிய கீதத்துடன் ரெஜினோல்ட் குரே கடமைகள் பொறுப்பேற்பு-
வடமாகாணத்தின் 5ஆவது ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ரெஜினோல்ட் குரே இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ். கச்சேரி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 10.28 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கடமைப் பொறுப்பேற்றல் நிகழ்வில், தனது பாரியாருடன் வருகை தந்திருந்த அவரை, வடமாகாண சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
தமிழர் சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்ட அவர், அலுவலக வாசலில் பால் காய்ச்சியதுடன், தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதத்தினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அதன்பின்னர் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆசியுடன், சுமார் 10.28 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வழக்கிலிருந்து விடுதலை-
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெள?க்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய விசாரணை நடவடிக்கையின் போது ஷிராணி பண்டாரநாயக்க தரப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. அத்துடன் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை-
வட மாகாணத்தில் மேலும் 63 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
நாகர்கோயில், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
புலிகளால் 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.இராணுவத்தினர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் இணைந்து நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை, ஆஸ்திரியா ஜனாதிபதிகள் சந்தித்துப் பேச்சு-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்த்திரியா நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷர் அவர்களை இன்று சந்தித்துள்ளார்.
ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஸ்த்திரியா நோக்கி சென்றிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்த்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு உயர் அரச பிரதிநிதிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஸ்ணவியின் சடலம் இன்று அடக்கம்-(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மாணவியின் சடலம் இன்று தச்சனாங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதன்போது,மகளிர் அமைப்புக்களால் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை மற்றும் இன்று காலையும் உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதையடுத்து, சடலம் பண்டாரிகுளம் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கத்துக்காக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி விசேட செவ்வி-
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகள், கூட்டமைப்பினுள் கட்சித்தாவல்கள், வெளிநாட்டுச் சந்திப்புக்கள், தென்னிலங்கையின் மாறாத நிலைப்பாடுகள், பிராந்திய, சர்வதேச நாடுகளின் ஆட்சிமாற்றத்தின் பின்னரான நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கிய செவ்வியில்,
தீர்வு விடயத்தில் அதியுச்ச கோரிக்கைகளையே முன்வைக்கவேண்டும். கட்சித்தாவல்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்துள்ளது. அதனைத்தடுக்கவேண்டிய பொறுப்பு கட்சித்தலைமைகளுக்கே உள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு பெரும்பான்மையினத்தினுள் காணப்படும் ஆதரவு, தெற்கு நிலைமைகள் ஆகியவற்றை புதிய அரசாங்கமும் கவனத்தில் எடுத்தே தனது செயற்பாடுகளை கருத்துக்களை முன்வைக்கும் என்பதை ஆரம்பத்திலிருந்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அதேநேரம் தமது நலன்களுக்காக பிராந்திய, சர்வதேச தரப்புக்கள் எம்மைப் பலிகொடுப்பதற்கு தயங்கமாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, Read more
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடன் அரசியல் ஆர்வலர்கள் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)
புளொட் தலைவரும் யாழ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள இல்லத்தில் 14.02.2016 அன்று சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வழமையாக நடைபெற்று வருகின்ற இத்தகைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே 14.02.2016 அன்று கந்தரோடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலுக்கு அரசியல் ஆர்வலர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், அரசியல் ஆர்வலர்களும் சமகால அரசியல் தொடர்பில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
சேதமடைந்த காக்கைதீவு மீன்சந்தையின் நிலைமைகளை சீர்செய்ய பா.உ த.சித்தார்த்தன் நடவடிக்கை-(படங்கள் இணைப்பு)
யாழ். காக்கைதீவு மீன்சந்தையானது மிகவும் சேதமடைந்த நிலையில், மக்களின் பாவனைக்கு ஒவ்வாத வகையில் மிகவும் தரம் குறைந்த நிலையில் உள்ளது.
இந்த நிலைமை தொடர்பில் பாவனையாளர்களும் விற்பனையாளர்களும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்த முறைப்பாட்டிற்கமைய
நேற்று (17.02.2016) அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் மேற்படி மீன் சந்தையை சீரமைப்பது தொடர்பாக அம்மக்களுடன் கலந்து பேசியதுடன்,
இப்பிரச்சினையினை வலிதெற்கு பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்து இப் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக்கொண்டார். Read more
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெர்மன் ஜனாதிபதியுடன் சந்திப்பு-
ஜெர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஒக்கீம் கொக்கை சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பர்லீனிலுள்ள பெல்வியு மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெர்மன் ஜனாதிபதி அமோக வரவேற்பளித்ததாகவும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 5 தசாப்த காலமான ஜெர்மனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி உதவி தொடர்பில் தனது இதயபூர்வமான நன்றிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லும் இலங்கையின் எதிர்காலத்திற்கு தமது அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அதியுட்ச பங்களிப்பை தாம் பெற்றுக் கொடுப்பதாக இதன்போது ஜெர்மன் ஜனாதிபதி ஒக்கீம் கொக் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடக்கூடியது.
ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு-
யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோதே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட அஞ்சலா மெர்கல், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம் தொடர்பில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் எதிர்கால பயணத்துக்கு முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வர மக்களுக்கு மாத்திரமே அனுமதி-
கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் இருந்து மாத்திரமே இந்திய பிரஜைகள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தை தவிர்ந்து ஏனைய பகுதிகளிலிருந்து கச்சதீவு திருவிழாவிற்கு செல்வோர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் பொலிஸ் துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் செல்வதற்கென 91 படகுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் , மூவாயிரத்து 500 பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பொலிஸ் துணை கண்காணிப்பாளர் இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இடம்பெறவுள்ளது.
ஜோன் கீ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு விஜயம்-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தினரையும் நியூசிலாந்து பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.
இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி-
இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது. ஜேர்மன் – இலங்கைக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அங்கிருக்கும் எமது விஷேட பிரதிநிதி ஷெகான் பரணகம குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் யூரோ வில்பத்து சரணாலய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், வடக்கு, கிழக்குக்காக நான்கு மில்லியன் யூரோவும், 2.4 மில்லியன் யூரோ சிறிய மற்றும் மத்தியதர தொழிற்துறை முன்னேற்றத்திற்காகவும் மீதமுள்ள 0.6 மில்லியன் யூரோ உள்ளூராட்சி மன்ற மற்றும் பேராசிரியர்கள் போன்றோருக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மேலும் ஒரு மில்லியன் யூரோ விஷேட வேலைத்திட்டத்திற்காக வழங்கப்பட்டவுள்ளதாகவும் ஷெகான் பரணகம கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் ஜேர்மனுக்காக விஜயத்தின் இறுதி நாளான இன்று அவர் வர்த்தகர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்த சந்திப்பில் 250 ஜேர்மனிய மற்றும் 32 இலங்கை வர்த்தகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றையதினம் மீண்டும் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கட்டணம் செலுத்தப்படாது விளம்பரம் ஒளிபரப்பு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். சுயாதின தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன இந்த விடயம் தொடர்பில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான முறைப்பாடு குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேரிப்புற வாசிகளுக்கு புதிதாக 13,000 வீடுகள் அமைக்கத் திட்டம்-
கொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு 13,000 புதிய வீடுகளில் குடியமர்த்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் போது சேரிப் புறத்தில் வாழந்த 5,000 பேர் புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். சிறிய பகுதியில் வாழ்ந்த இவர்களுக்கு 500 சதுர அடி பரப்பிலான வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சேரிப்புறத்தில் வாழும் 47,000 பேரை புதிய இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டி உள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் பொருளாதார பெறுமதி இடங்களில் வாழும் சேரிப்புர மக்கள் நகர அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் என்பவற்றிக்கு இடையூறாக காணப்படுவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறானவர்கள் பாரிய சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க கூடும் என அவர் தெரிவித்தார். எனவே சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் சேரிப்புற மக்களின் தேவைக்கேற்ப புதிய வீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ கூறியுள்ளார்.
மாங்குளம் விபத்தில் ஆறுபேர் காயம்-
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இதில் வவுனியாவைச் சேர்ந்த தெய்வேந்திரம் வாசிகன் (வயது 27), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகன சாரதியான சிறீராஜ்குமார் சந்திரராஜ் (வயது 26), யாழ்ப்பாணம் – நெல்லியடியை சேர்ந்த சுந்தரலிங்கம் ராகவேந்தர் (வயது 26), யாழ்ப்பாணம் நீர்வேலியை சேர்ந்த செல்வராசா ஜசோதரன் (வயது 28), விசுவமடு புன்னைநீராவியைச் சேர்ந்த விக்னேஸ்வரராசா ஜசோதரன் (வயது 30), யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த பரமநாதன் லோகநாதன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
பலாலி விமானநிலைய விரிவாக்கத்திற்கு முதல்வர் எதிர்ப்பு-
இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபை நிறைவேற்றியது. இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் இந்த எதிர்ப்பு குறித்து, இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் மயிலிட்டி மீன்பிடித்துறையை அண்டியுள்ள மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதாலேயே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 February 2016
Posted in செய்திகள்
சரணடைந்தோர் பெயர் விபரங்களை 58ம் படையணி ஒப்படைக்க வேண்டும்-நீதிமன்றம் உத்தரவு-
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதாக வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார். அரசாங்கம் அளித்த பாதுகாப்பு மற்றும் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு 58- ஆம் படையணி முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரையில் இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் வெளியிடப்படவில்லை. Read more
Posted by plotenewseditor on 17 February 2016
Posted in செய்திகள்
இலங்கை மற்றும் ஜேர்மனுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து-
ஜேர்மனுக்கு விஜயம் செய்து மூன்றாவது நாளான இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு சான்சிலர், ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், இன்று இரு நாடுகளுக்குமிடையில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக, ஜேர்மனியின் பர்லின் நகரிலுள்ள எமது விஷேட பிரதிநிதி ஷேகான் பரணகம தெரிவித்துள்ளார். அத்துடன், மாலை ஜேர்மன் சான்சிலருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது சான்சிலர் விஷேட உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த நாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதே தனது ஜேர்மன் விஜயத்தின் நோக்கம் என, இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.
மின்சார சபையின் மனிதவலு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-
இலங்கை மின்சார சபையின் மனித வலு ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி கொள்ளுப்பிடியவிலுள்ள மின் சக்தி அமைச்சு வரை சென்றது. அங்கு “அவரவர் தகுதிக்கு ஏற்ப சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதாக, மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் வாய் மொழிமூலம் வாக்குறுதி வழங்கியதாக கூறப்படுகின்றது. இதனயைடுத்து, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இவர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம் காரணமாக கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடக்கூடியது.
மட்டக்களப்பில் திராய்மடு பகுதியில் ஆயதங்கள் மீட்பு-
மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்திற்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்திலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தோட்டமொன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, 30 துப்பாக்கி ரவைகள், 1 ரைக்கூடு என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சாவுடன் யாத்திரை சென்ற பிக்குகள் கைது-
காவி உடை அணியாமல் சாதாரண உடையில் காஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக காவி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்த 5 பௌத்த பிக்குகளில் ஒரு பிக்குவிடமிருந்து கஞ்சா போதைபொருள் பக்கற்றுக்கள் ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஹட்டன் குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன் பொலிஸாரால் இந்த 5 பேர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. Read more