Header image alt text

சுவிஸில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு-

swissசுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதாகவும் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்னில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு மீண்டும் நாடு திரும்பியவர்கள் கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சுவிச்சர்லாந்தில் தற்போது சுமார் 50,000 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் மருத்துவ சிகிச்சையை புறக்கணிக்க தீர்மானம்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகள் 14பேர் தொடர்ச்சியாக 12ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தமக்கான முடிவொன்று கிடைக்கும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு தமது குடும்ப அங்கத்தவர்கள் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார். Read more

மன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் அசமந்தப்போக்கு-

puthaikuliமன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதால், அரச சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மன்னார் மாந்தையிலுள்ள திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ் ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 87 மனித மண்டையோடுகள் மற்றும் எச்சங்களின் கால எல்லையை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பரிசோதிக்க முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில், பெய்ஷரூட், ஆர்ஜன்டீனா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாதபடியால், அந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர். Read more

முள்ளியவளை மக்களின் கோரிக்கைக்கு அமைய பொது கிணறு அமைப்பு-(படங்கள் இணைப்பு)

aa (1)முள்ளியவளை மத்தி மக்களின் பொதுக் கிணற்றுக்கான கோரிக்கைக்கு அமைய ரிசி தொண்டுநாத சுவாமி(அமெரிக்கா) அவர்களால் பொதுக்கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் வசதியின்றி அவதிப்படுவதாகவும் தங்களின் பிரதேசத்தில் ஒரு கிணறுகூட இல்லை என்றும் தமக்கான குடிநீரை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக கூறியிருந்தனர். இதனைக் கருத்தில் எடுத்த வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் ரிசி தொண்டுநாத சுவாமியின்(அமெரிக்கா) கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் 27.12.2015 அன்று கொண்டு சென்றதையடுத்து சுவாமி உடனடியாக அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கவனத்தில் எடுத்தார். தொடர்ந்து அப்பிரதேசத்தில் பல லட்சம் ரூபா செலவில் புதிதாக கிணறு அமைக்கும் பணி தொடக்கிவைக்கபட்டு தற்போது முடிவுறும் நிலைக்கு வந்துள்ளதுடன் மக்களுக்கான தண்ணீர் பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகொளை ஏற்று ரிசி தொண்டுநாத சுவாமிகளால் மக்களின் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்ததையொட்டி சங்கத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகளை சுவாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more

பெற்றோரின் முயற்சியே குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது-த.சித்தார்த்தன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

20160304_140328யாழ். சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கான விளையாட்டுப் போட்டி இன்று (04.03.2016) கல்லூரியினுடைய அதிபர் அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் மைதிலி தேவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பப் பிரிவின் பொறுப்பாசிரியை அருட்சகோதரி மேரி நிரஞ்சலா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பும் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க விசேட செயலணி-

zxzxவவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க விசேட செயலணி மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விசேட செயலணியொன்றும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்தமைக்குரிய காரணங்கள், அதனைத்தடுக்க மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி மாவட்ட மட்ட செயலணி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பில் அரச அதிபரின் கீழ் செயலணியொன்று செயற்பட்டமையால் அதனை இதன்போது மீள்புனரமைப்பு செய்து வலுவுள்ள செயலணியாக மாற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம்.பி.நடராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

குற்றவாளிகளை விசேட பாதுகாப்புடன் வைக்க ஏற்பாடு-

jailபாரிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான குற்றவாளிகளின் வழக்கு விசாரணைகளின் போது, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலிருப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதற்காக, விசேட அனுமதியொன்றை நீதி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மேற்கண்ட குற்றவாளிகள், அவர்கள் தொடர்பான வழக்குகளில் மாத்திரமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தெமட்டகொடை சமிந்த என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்தே, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இணையதளங்கள் தடை செய்யப்பட மாட்டாது-

maithriஇலங்கையில் இணைய தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் இணைய தளமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இணைய தளங்களை தடை செய்யும் திட்டங்கள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. இவ்வாறான ஓர் நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் இணையதளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

நிலங்களை மீளக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்-

dfdfdffயாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த தங்களை மீள்குடியேற்றக் கோரி 32 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில் மாலை 5மணி வரையில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக பொதுமக்களுடைய நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்தவேண்டும், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வந்து மேற்படி உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. இன்றைய தினம் மருதனார் மடம் கண்ணகி முகாமில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மக்கள் தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக உட னடியாக விடுவியுங்கள், விமான நிலையம், துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக மக்களுடைய நிலத்தை எடுக்காதீர்கள் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக 32 முகாம்களிலும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாக அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் செயற்பாடு-

mangala_samaraweeraபயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம் பெற்ற ஜனநாயக சமூக கட்டுப்பாட்டு வாரியத்தின் 20 வது அமர்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரவித்திருந்தார். எனவே இனப்பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளை எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் காரணமாக இலங்கையில்,அரசியல் பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு என்பன ஏற்படும் என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் இல்லை. எனினும் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை சர்வதேச நியமத்தின் அடிப்படையில் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரொக்கட் கழக வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்-

a1d0e597-4b25-4459-96a4-7118cbb29f71வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு உமாமகேஸ்வரன் வீதியில் உள்ள ரொக்கட் விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் (கோவில்குளம் இந்து கல்லூரிக்கு அருகாமையில்) 3 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது கடந்த கால நிகழ்வுகள் கூட்டறிக்கைகள் கணக்கு அறிக்கைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.

எனவே இந்நிகழ்விற்கு முன்னாள் ரொக்கட் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இவ்விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டங்கள் நீண்ட காலமாக இன்னும் நடைபெறவில்லை. இதேவேளை வவுனியா மண்ணில் பிரபல்யமாக விளங்கிய ரொக்கட் விளையாட்டு கழகத்தினை மறுசீரமைப்பு செய்ய சகலரும் முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற பதவி உருவாக்கம்-

parliamentபாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற புதிய பதவி முதற்தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலவாது தடவையாக பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானியாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் சலுகைகள் இவருக்கு கிடைக்கப்பெறுகின்றது.

கலைமகள் விழா-

Posted by plotenewseditor on 4 March 2016
Posted in செய்திகள் 

கலைமகள் விழா-(படங்கள் இணைப்பு)

ffg (4)யாழ்ப்பாணம் அராலி ஆகாயகக்குளம் பிள்ளையார் கோவிலின் கலைமகள் விழா அண்மையில் நடைபெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர். திரு. கஜதீபன் அவர்கள்,

வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். மாணவர்களது பல்வேறு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது. Read more

பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும்-நிஷா பிஸ்வால்-

nisha thesai biswalஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலான செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது தொடர்பில் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், ஐ.நா மனித வுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் முதற்தடவையாக இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதற்காக நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினோம். Read more

வித்தியா படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம்-

vithyaயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மாணவியின் படுகொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதன்போது, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளைப் பிரிவு பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா மன்றில் வாசித்தார். மாணவி வித்தியாவை வழக்கின் ஆறாவது சந்தேகநபரான துசாந் ஒருதலையாக காதலித்தார். அதனை வித்தியா ஏற்காத காரணத்தால் ஐந்தாவது சந்தேகநபரான சந்திரகாசனுடன் சேர்ந்து கடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கு 9ஆவது சந்தேகநபரான சுவிஸ் குமார் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார். தங்களுக்கு உதவியாக ஏற்கனவே, களவு வழக்கொன்றில் வித்தியாவின் தயார் சாட்சி சொல்லி பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் துணைக்கு வைத்துக் கொண்டனர். அவர்களே, இவ்வழக்கின் 2ஆவது, 3ஆவது சந்தேகநபர்கள். அவர்கள் வித்தியா பாடசாலை செல்லும் போது, அவரை வழிமறித்துக் கடத்தினர். துசாந், சந்திரகாசன் ஆகியோர் வித்தியாவை பாலியல் வல்லுறவு செய்து பின்னர் கொலை செய்தனர். Read more

இணையத்தளங்கள் அனைத்தும் 31ம் திகதிக்கு முன் பதிவு-

websitesஇதுவரை பதிவு செய்யப்படாத செய்தி இணையத்தளங்கள் அனைத்தையும் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுமாறு, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தினத்திற்கு முன் பதிவு செய்யாத எந்தவொரு இணையத்தளத்தையும் ஊடக அமைச்சு உத்தியோகபூர்வமாக ஏற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள 011 – 251 3460 அல்லது 011 251 3943 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும். அவ்வாறு இல்லை எனில், றறற.அநனயை.பழஎ.டம என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன்மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாமென கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் இன்றும் விசாரணை-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்றும் ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பிலேயே அவர் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னரும் சில தடவைகள் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான கருணாசேன ஹெட்டியாராச்சியும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை-

emilkanthanபுலிகள் இயக்கத்தின் நிதிப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் அன்டனி எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக, பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன வெளியிடப்பட்டுள்ளன. எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கை மே 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி தீர்மானித்துள்ளார்.

யாழ். மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-

jaffna MCயாழ். மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். மாநகர சபையின் முன்பாக இன்று காலைமுதல் நண்பகல் வரை இந்த ஆர்ப்பாட்டத்தினை இவர்கள் முன்னெடுத்திருந்தனர். யாழ்.மாநகர சபையின் கீழ் 180 பேர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். நாளாந்த சம்பளத்தின் அடிப்படையில் கடமையாற்றும் தம்மை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த காலங்களில், நிரந்தர நியமனம் வழங்க கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 3 மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் கடந்த காலங்களில் இருந்த யாழ்.மாநகர ஆணையாளர்கள் 3 பேரிடமும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். Read more